சியான் விக்ரம்-க்கு லிப்லாக்! வாந்தி எடுத்து அசிங்கப்படுத்திய ஐஸ்வர்யா! அந்த அளவுக்கு மோசமா இருந்ததா?
தமிழ் சினிமாவில் நடிகை லட்சுமியின் மகளாக அவர் முன்னணி நடிகையாக இருக்கும் காலத்திலேயே இளம் நடிகையாக அறிமுகமாகினார். 90களில் முன்னணி நட்சத்திரங்களுடன் எப்படி நடிகை லட்சுமி நடித்தாரோ அதேபோல் அவரது மகள் ஐஸ்வர்யாவும் நடித்து கொடிக்கட்டி பறந்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்து வந்த ஐஸ்வர்யா சில படங்களில் வில்லியாகவும் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார். அவர் நடித்து ஹிட் அடித்த படங்களில் சூப்பர் ஸ்டாரின் எஜமான் படமும் ஒன்று. அப்படி நடித்துக்கொண்டிருக்கும் ஐஸ்வர்யா தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வருகிறார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் விக்ரம் பற்றி பேசி ஷாக் கொடுத்துள்ளார். மீரா படத்தின் போது விக்ரமுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா நடித்திருந்தார். படத்தில் மிகவும் நெருக்கமான காட்சி முத்தக்காட்சி என அமைந்திருக்கும்.
அப்படி லிப்லாக் காட்சியில் நானும் விக்ரமும் நடித்த போது வாந்தியே வந்துவிடும் அளவிற்கு கஷ்டப்பட்டோம் என்று கூறியுள்ளார். இருவரும் தண்ணீரில் விழுந்த அடுத்த நொடியில் விக்ரம் எனக்கு முத்தம் கொடுக்க வேண்டும்.
எனக்கு வாயில் தண்ணீர் விக்ரமுக்கு மூக்கில் தண்ணீர் ஏறியது. இதனால் வாந்தி தான் வந்தது. ஆரம்பத்தில் விக்ரமுடன் எனக்கு சண்டைத்தான் வந்தது. அதன்பின் நாங்கள் நண்பர்களாக மாறிவிட்டேம் என்று கூறியுள்ளார் ஐஸ்வர்யா.