பல கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கியுள்ள விக்ரம்..
Vikram
By Kathick
தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் சீயான் விக்ரம். இவர் நடிப்பில் கடைசியாக வீர தீர சூரன் படம் வெளிவந்தது.
இதை தொடர்ந்து இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் ரோல்ஸ் ராய்ஸ் கார் என்றால் உடனடியாக அனைவருக்கும் விஜய் தான் நினைவிற்கு வருவார்.
ஆனால், அவர் தற்போது தனது காரை சமீபத்தில் விற்றுவிட்டார். மேலும் நடிகர் தனுஷும் ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்துள்ளார்.
இந்த நிலையில்,நடிகர் சீயான் விக்ரம் ரோல்ஸ் ராய்ஸ் Spectre என்கிற புதிய மாடல் காரை வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சொகுசு காரின் விலை ரூ. 8 கோடி இருக்கும். விக்ரம் வாங்கியுள்ள புதிய ரோல்ஸ் ராய்ஸ் Spectre காரின் வீடியோ வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ..