அடுத்த படத்தை நடிகர் விக்ரம் தொடங்காமல் இருப்பதற்கு என்ன காரணம் தெரியுமா?
விக்ரமின் அடுத்த படம் தள்ளி போகிறதா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விக்ரம், இவர் நடிப்பில் கடைசியாக மகான் திரைப்படம் நேரடியாக OTT-யில் வெளியானது.
நல்ல வரவேற்பை பெற்ற அப்படத்தில் விக்ரமுடன் அவரின் மகன் துருவ் விக்ரமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விக்ரம் நடித்து முடித்துள்ள கோப்ரா, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட திரைப்படங்கள் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகளில் இருந்து வருகிறது.
அடுத்து அப்படங்கள் தான் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. இந்நிலையில் விக்ரம் அடுத்து இயக்குனர் பா.ரஞ்சித்தின் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார், அப்படமும் குறித்த அறிவிப்பு எல்லாம் முன்பே வெளியாகியிருந்தது.
இதனிடையே அப்படம் இன்னும் தொடங்காமல் இருப்பதன் காரணம் தெரியவந்துள்ளது. ஆம், விக்ரம் தற்போது அவரின் குடும்பத்துடன் லண்டன் சென்றுள்ளாராம். அங்கு தனது குடும்பத்துடன் நேரத்தை கழித்து வரும் விக்ரம் அதன் பின்பே அவரின் அடுத்த படத்தை ஜூலை மாதம் முதல் துவங்கவுள்ளார்.
டான் உலகம் முழுவதும் இத்தனை கோடி வசூலா..கோலிவுட்டின் முதல் ப்ளாக்பஸ்டர்