கோடிக்கு ஆசைப்பட்டு அரசியலை விடபோகிறாரா கமல்! சபதம் எல்லாம் நல்லா தான் இருக்கு?
தமிழ் சினிமாவில் மூத்த நடிகராகவும் உலக நாயகனாகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். பன்முகத்திறமை கொண்ட கமல்ஹாசன் அரசியல் ஏற்பட்ட படுதோல்விக்கு பிறகு மீண்டும் நடிக்க ஆரம்பித்து விட்டார். அதந்தொடர்ச்சியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்தார்.
கொண்டாடும் விக்ரம் குழு:-
படம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி வெளியாகியது. படம் ரிலிசான 11 நாட்களில் 310 கோடி ரூபாய் வசூல் சாதனையை முறியடித்திருக்கிறது. கமல் ஹாசனின் இத்தனை ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் 300 கோடி வசூலை தாண்டியது இதுவே முதன்முறை.
அந்த அளவிற்கு படத்தின் விமர்சனமும் வசூலும் பட்டையை கிளப்பியுள்ளது. தற்போது படத்தின் வெற்றிக்காக லோகேஷ் கனகராஜ், கமல் ஹாசன், அனிருத் பல நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு வருகிறார்கள்.
அரசியல் மற்றும் சினிமா
சமீபத்தில் கமல்ஹாசன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய விசயம் தற்போது பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. உங்கள் தெருவில் ஒருவன் பணக்காரன் ஆனால் போதாது. எல்லோருமே சந்தோஷமாக இருக்க வேண்டும். பணத்தை பற்றி கவலைப்படாத ஒரு தலைவன் வேண்டும்.
சிறையில் இருந்தால் அரசியல் வரலாம். திரையில் இருந்து கொண்டும் அரசியல் செய்யலாம். மேலும் என்னை நடிக்க விட்டீங்கனா நான் 300 கோடி சம்பாதிப்பேன். அது வந்து கொண்டிருக்கிறது. நான் என் கடனை அடைப்பேன், நான் வயிறார சாப்பிடுவேன், என்னுடைய உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுக்க முடிந்ததை கொடுப்பேன்.
அதற்குப் பிறகு இல்லை என்றால் இல்லை என்று தைரியமாகச் சொல்லுவேன். எனக்கு வள்ளல் ஆகுவதில் நம்பிக்கை இல்லை. மனிதனாக இருப்பதே போதும் என்று கூறியுள்ளார்.
#Video | விக்ரம் படத்தின் வசூலை நாசுக்காக சொன்ன கமல்ஹாசன்!#Sunnews | #KamalHaasan | #Vikram pic.twitter.com/Gy5Tus5pgE
— Sun News (@sunnewstamil) June 13, 2022
வசூல் வேட்டையில் விக்ரம்:-
இதிலிருந்து கமல் ஹாசன் அரசியலை விட்டு சற்று தள்ளி சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் நடிக்கவுள்ளார் என்றும் விக்ரம் படத்தின் வசூல் நிச்சயம் 300 கோடியை அடைந்துவிட்டது என்று தெரிகிறது. இதையடுத்து பல இயக்குனர்களுடன் நடிப்பிலும், தயாரிப்பிலும் வேலை செய்யவுள்ளார்.