நடிகை சமந்தா ஒருவரை காதலிக்கிறார்!! வதந்தியை பரப்பிய நடிகர் விக்ரம்..

Vikram Samantha Dhivyadharshini Gossip Today
By Edward Jan 19, 2024 08:30 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகைகாவும் பல கோடி சம்பளம் வாங்கும் ஹீரொயினாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து சில ஆண்டுகளில் விவாகரத்து பெற்ற சமந்தா மயோசிடிஸ் என்ற நொயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்து வருகிறார்.

தற்போது இந்தி, தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமந்தாவின் ஆரம்பகாலக்கட்டத்தில் நாக சைதன்யாவை காதலிப்பதற்கு முன் நடிகர் சித்தார்த்தை காதலித்து வெளியில் சுற்றி, அதன்பின் இருவரும் பிரிந்துவிட்டனர்.

நடிகை சமந்தா ஒருவரை காதலிக்கிறார்!! வதந்தியை பரப்பிய நடிகர் விக்ரம்.. | Vikram Treat Gossips For Samantha Secret Love

இந்நிலையில் நடிகை சமந்தா, நடிகர் சியான் விக்ரமுடன் 10 எண்றதுக்குள்ள படத்தில் ஜோடியாக நடித்திருந்த போது அப்படத்தின் பிரமோஷனுக்காக காஃபி வித் டிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

விக்ரமும் சமந்தாவும் கலந்து கொண்ட அந்நிகழ்ச்சியில் டிடி பல சுவாரஸ்யமான கேள்விகளை கேட்டார். அதில் டிடி, சமந்தாவை பற்றிய வதந்தி ஒன்றை பரப்ப வேண்டும் என்றால் என்ன பரப்புவீர்கள் என்று விக்ரமிடம் கேட்டிருக்கிறார்.

சமந்தாவை பற்றி பரப்பணும் என்றால் ஒருவரை காதலிக்கிறார் என்பது தான் என்று கூறினார். சமந்தா தன்னை பற்றி வதந்தி பரப்ப நிறைய இருக்கிறதே என்று காமெடியான ரியாக்ஷனை கொடுத்திருக்கிறார்.