அந்த நடிகருடன் ஒரேஒரு படம்! நடுத்தெருவுக்கு வந்து புலம்பும் தயாரிப்பாளர்..

actor producer Vimal
By Jon Mar 05, 2021 03:36 PM GMT
Report

சினிமாவில் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் நல்ல நடிகர் நடிகைகளை வைத்து அதுவும் மார்க்கெட் இருக்கும் பிரபலங்களை வைத்து தான் படங்களை எடுப்பார்கள். ஆனால் சில பிரபலங்கள் மீது நம்பிக்கை வைத்து படங்களை கொடுத்து கடும் நஷ்டத்தை சந்திப்பார்கள். அந்தவகையில், பசங்க, களவாணி என தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்தவர் தான் விமல்.

கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் வரை அவரது மார்க்கெட் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அதன்பிறகு சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள் நடித்ததால் ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்பட்டு ஒதுக்கி வைத்தனர். சொல்லிக்கொள்ளும்படி எந்த படமும் அமையவில்லை. தற்போது கைவசம் படங்கள் வைத்திருந்தாலும் சொல்லிக்கொள்ளும்படி அவரது மார்க்கெட் இல்லை என்பதுதான் உண்மை.

கடைசியாக விமல் மன்னர் வகையரா படத்தை சொந்தமாக தயாரித்தார். இந்த படத்திற்காக ஒருவரிடம் 50 லட்சம் கடன் வாங்கினாராம். அவரும் வீட்டுப் பத்திரத்தை வைத்து 50 லட்சம் கடன் கொடுத்துள்ளார். கடன் வாங்கிய பிறகு விமல் கொடுத்த காசோலையில் பணம் இல்லையாம். இதனால் கடன் கொடுத்தவரின் வீடு ஜப்தி ஆகும் நிலைக்கு வந்தும் விமல் அதை கண்டுகொள்ளவில்லை என்கிறார்.

இதனால் விமல் தன்னுடைய மனைவியுடன் திமுக கட்சியில் இணைய இருந்த நேரத்தில் நேரடியாக பணம் கொடுத்து உதவியவர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி விட்டாராம். இதனால் விமல் தரப்பிலிருந்து ஏதாவது பதில் கிடைக்குமா என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.