விஜய் அரசியலில் கில்லியா? ஒடஞ்சு விழுற சுள்ளியான்னு பார்ப்போம்..தளபதியை வம்புக்கு இழுத்த நடிகை விந்தியா..
விஜய் தவெக மாநாடு
நடிகர் விஜய் சினிமாவைவிட்டு விலகி முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளார். அதற்கான முதல்படியை தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டினை கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி பிரம்மாண்ட முறையில் நடத்தி முடித்தார்.
இதற்கான விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் விஜய் அரசியல் கட்சியை ஆரம்பித்தது முதல் மாநாடு வரையிலான அவரது ட்ரெஸ் கோட் ஒரே மாதிரி இருப்பதை அறிந்த சிலர் விஜய்யுன் வியூகம் என்ன என்பதை ஆராயத்துவங்கியுள்ளனர்.
சில நாட்களாக விஜய்யின் மாநாட்டு பேச்சும் செயலையும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கடுமையாக விமர்சித்து பேசினார்.
விந்தியா கிண்டல்
தற்போது நடிகையும் அரசியல் பிரபலமுமான விந்தியா விஜய்யின் அரசியல் வருகையை வரவேற்காமல் அதிமுகவுக்கு மாற்றாக விஜய் வருகிறார் என்றால் அது வேடிக்கைதான் என்று கிண்டல் செய்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியொன்றில், அரசியல் என்றால் சாதாரண விஷயம் என்று நினைத்துவிட்டு பலபேர் கிளம்பி வந்துவிடுகிறார்கள். உலகநாயகன் கமல்ஹாசன் வரை கட்சி ஆரம்பித்து என்ன ஆச்சுன்னு எல்லோரும் பார்த்திருப்பார்கள்.
எம்ஜிஆர் மாதிரி எல்லாம் விஜய் ஆகமுடியாது, அரசியலுக்கு ரொம்பவே பொறுமை முக்கியம். உருவகேலி பண்ணுவாங்க, உடல்ரீதியான கிண்டலை சமாளிக்க வேண்டும், மன வலிமை வேண்டும். விஜய் பறந்து அடிக்கிற கில்லியா? இல்லை ஒடஞ்சு விழுகிற சுள்ளியான்னு பார்க்க காத்திருக்கிறேன் என்று விந்தியா கிண்டல் செய்துள்ளார்.