உச்சத்தை விட்டுவிட்டு வரச்சொல்லி நாங்க அழவில்லை.. அப்படி யாரு வரச்சொன்னா? விஜய்யை மறைமுகமாகிய தாக்கிய நடிகை..

Vijay Vetrimaaran Gossip Today Tamil Actress Actress
By Edward Apr 04, 2026 06:43 AM GMT
Report

நடிகர் விஜய் குறித்து நாளுக்கு நாள் கடுமையான விமர்சனங்கல் எழுந்து வரும் நிலையில், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தன்னுடைய பரப்புரையை தொடர்ந்து செய்து வருகிறார். இன்று மார்ச் 4 ஆம் தேதி புதுச்சேரியில் தன்னுடைய ரோடு ஷோவையும் பரப்புரையையும் செய்து வருகிறார்.

இந்நிலையில் விஜய்யின் அரசியல் குறித்து நடிகையும் விமர்சகருமான வினோதினி வைத்தியநாதன் தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.

உச்சத்தை விட்டுவிட்டு வரச்சொல்லி நாங்க அழவில்லை.. அப்படி யாரு வரச்சொன்னா? விஜய்யை மறைமுகமாகிய தாக்கிய நடிகை.. | Vinodhini Vaidyanathan Indirectly Target Vijay Pol

வினோதினி வைத்தியநாதன்

அதில், முதலில் இந்த தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் என் வாழ்த்துக்கள். மிகச்சரியான நபரை மக்கள் தெர்ந்தெடுப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். ஆனால் இந்த வீடியோவை மிகவும் ஆதங்கத்துடன் தான் நான் பேசுகிறேன்.

சமீபத்தில் சிலர், நான் என் கேரியரின் உச்சத்தை விட்டுவிட்டு வந்தேன், எல்லா வலிகளையும் தாங்கிக்கொண்டு நான் உங்களுக்காக வருகிறேன், மிகப்பெரிய பதவியை விட்டுவிட்டு வருந்திருக்கிறேன் என்றெல்லாம் கூறி மக்களிடம் ஓட்டு கேட்கிறார்கள்.

நான் அவர்களை நோக்கி கேட்கிறேன், ஒரு மனிதன் ஒரு விஷயத்தை அவருடைய சொந்த விருப்பம் இல்லாமல் எப்போதும் செய்யமாட்டான். அப்படியிருக்கு போது நீங்கள் உங்களின் சொந்த விருப்பத்தின் பேரில் தான் அரசியலில் ஈடுபடுகிறீர்கள்.

உச்சத்தை விட்டுவிட்டு வரச்சொல்லி நாங்க அழவில்லை.. அப்படி யாரு வரச்சொன்னா? விஜய்யை மறைமுகமாகிய தாக்கிய நடிகை.. | Vinodhini Vaidyanathan Indirectly Target Vijay Pol

அப்படி யாரு வரச்சொன்னா

அப்படியிருக்கையில், நீங்கள் ஏன் கரியரின் உச்சத்தை விட்டுவிட்டு வந்தேன், பதவியை விட்டுவிட்டு வந்தேன்னு உங்களை நீங்களே பரிதாபமானவராக காட்டிக்கொள்கிறீர்கள். உங்களை யார் அப்படி விட்டுவிட்டு வரச்சொன்னது?. நாங்கள் கேட்டோமா? நாங்கள் அழைத்தோமா?

உங்களுக்கு ஏதாவது வலி இருந்தால் அது தொடர்பாக மருத்துவரை போய் பாருங்கள். அவர்கள் உங்களுக்கு சிகிச்சை அளிப்பார்கள். நம் நாட்டில் எத்தனையோ மாற்றுத்திறனாளிகள் இருக்கிறார்கள். ஆதரவற்ற குழந்தைகள் இருக்கிறார்கள், ஆதரவற்றோர் இருக்கிறார்கள் அவர்கள் எல்லாம் சந்திக்காத நெருக்கடி, வலியையா நீங்கள் சந்தித்துவிட்டீர்கள்.

நீங்கள் நினைத்தால் உங்கள் வாழ்க்கையை உங்கள் தொழிலை மாற்றிக் கொள்ளமுடியும். ஆனால் அவர்களால் அதுகூட முடியாது. அப்படி இருக்கும்போது உங்களை நீங்களே ஒரு பரிதாபத்திற்குரிய மனிதராக காட்டி எதற்காக ஓட்டுக்கேட்கிறீர்கள் என்று விளாசிய பேசியிருக்கிறார்.