10 வருஷமா விராட் கோலி இதை செய்யவில்லை.. ரகசியத்தை கூறிய மனைவி அனுஷ்கா சர்மா..
வீரர் விராட்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவிற்கு ஆண் குழந்தை பிறந்ததை அடுத்து உடல் தகுதியுடன் இருக்கும் விராட் கோலியின் உணவு பழக்கம் என்ன? அவரின் ஃபிட்னஸ்-க்கு என்ன காரணம் என்ன? என்ற ரகசியத்தை கூறியிருக்கிறார்.
அனுஷ்கா சர்மா
உடல் தகுதி மற்றும் உணவு என வந்துவிட்டால் விராட் கோலி 100 சதவீத ஒழுக்கத்துடன் இருப்பார். உணவுப்பழக்கமும் உடல் தகுதியும் மிகவும் முக்கியம். இதனை சினிமாத்துறை கலைஞர்களும் பின்பற்றி வருகிறார்கள். அப்படி விராட் காலையில் எழுந்த உடன் கண்டிப்பாக கார்டியோ உடற்பயிற்சி மேற்கொள்வார். இல்லையென்றால் வலுதூக்கி உடற்பயிற்சி செய்வார். இதனை கண்டிப்பாக அவர் தவறவிட மாட்டார். பின் சில நேரம் கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்வார். உணவு பழக்கத்தில் விராட் போல் யாராலும் இருக்க முடியாது.
பட்டர் சிக்கன்
தின்பண்டங்களுக்கு அவர் இடமே கொடுக்கமாட்டார். அதேபோல் இனிப்பு நிறைந்த கூல்ட்ரிங்க்ஸையும் அவர் எடுத்துக் கொள்ளமாட்டார். 10 ஆண்டுகளாக அவர் பட்டர் சிக்கன் சாப்பிட்டதே கிடையாது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அதேபோல் விராட் கோலிக்கு தூக்கம் என்பது மிகவும் முக்கியம், அதில் அவர் சமரசமே செய்யமாட்டர. சரியாக தூங்கவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்.
தூக்கம் சரியாக இருந்தால் மட்டுமே நம்மால் சிறந்தமுறையில் செயல்பட முடியும் என்றும் தூக்கத்தை மட்டும்தான் நம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும் என்று விராட் என்னிடம் கூறுவார். உணவுப்பழக்கங்கள், உடற்பயிறிசிகளை விராட் கோலி தொடர்ந்து செய்வதால்தான் அவர் இன்று உலகின் சிறந்த விளையாட்டு வீரராக மட்டுமில்லாமல் மற்ற நபர்களுக்கும் ஊக்கத்தை கொடுக்கும் நபராக இருந்து வருகிறார் என்று அனுஷ்கா சர்மா உணர்ச்சிபூர்வமாக தெரிவித்துள்ளார்.