இன்ஸ்டாகிராம் இளம்பெண்ணுக்கு லைக் போட்டாரா விராட் கோலி!! அதிரும் ரசிகர்கள்...
விராட் கோலி
ஐபிஎல் சீசன் தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், வீரர்கள் பற்றிய சில விஷயங்கள் பெரியளவில் பேசப்படும். அப்படி ஆர்சிபி அணியின் அதிரவி வீரர் கிங் விராட் கோலி பற்றிய விஷயம் தான் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவரின் புகைப்படத்திற்கு விராட் கோலி லைக் போட்டதுதான் வைரலாகியுள்ளது. தென்னாப்பிரிக்க மாடல் பிரபலமான லிஸ்லஸ்(LizLaz) மற்றும் புகைப்படக் கலைஞர் அத்வைத் வைத்யா ஆகியோர் இணைந்து போட்ட பதிவினை விராட் கோலி லைக் போட்டுள்ளார்.
ஆனால் விராட் கோலி அவர்கள் யாரையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபாலோ செய்யவில்லை. இது சில நிமிடங்களிலேயே வைரலானது. ஆனால் இது வெறும் அல்காரிதம் சார்ந்த பிரச்சனைதான் என்றும் சில நேரங்களில் நான் ஒருபோதும் விரும்பாத பதிவுகளை என் இன்ஸ்டாகிராமில் பார்க்கிறேன் என்றும் விராட் கோலி கடந்த காலத்தில் இருந்தே கூறியிருக்கிறார் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

யார் இந்த லிஸ் லஸ்
விரார் கோலி லைக் போட்டிருப்பதாக கூறும் பெண் என்பவரின் பெயர் ஜெனிபர். ஜெர்மனியில் வசிக்கும் இவர் தென்னாப்பிரிக்க நாட்டை பூர்வீகமாக கொண்டவர். பாடகராக மட்டுமின்றி பயணம் தொடர்பான பிளாகரும் கூட. ஜெர்மானிய மொழி, ஆங்கிலம், டச்சு, இந்தி போன்ற மொழிகளையும் படித்துள்ளார்.
தற்போது மும்பை, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட உள்ளூர் மக்களுடன் பேசி வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.