குடும்பத்தை விட்டுவிடுங்கள்!! கடுப்பான விராட் கோலி.. பரபரப்பு சம்பவம்
விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களில் ஒருவர் விராட் கோலி. கடந்த 2008ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் களமிறங்கிய விராட் கோலி இன்று வரை யாராலும் அசைக்க முடியாத தூணாக இருக்கிறார்.
இவர் பாலிவுட் பிரபல நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் அனுஷ்கா சினிமாவை விட்டு விலகி குடும்பத்தை கவனிக்க தொடங்கி விட்டார்.
தற்போது, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், அடுத்த டெஸ்ட் போட்டி வரும் 26 ஆம் தேதி மெல்பேர்ணில் நடைபெற உள்ளது.
பரபரப்பு சம்பவம்
இதன் காரணமாக இந்திய அணி வீரர்கள் மெல்பேர்ண் வந்தடைந்துள்ளனர். அப்போது விராட் கோலி அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்தடைந்த போது, செய்தியாளர்கள் அவரின் குடும்பத்தினரை வீடியோ எடுக்க முற்பட்டனர்.
இதனை கண்டு கடுப்பான விராட் தனது குடும்பத்தை அனுமதி இல்லாமல் வீடியோ எடுக்க வேண்டாம் என்று கோபமாக கூறியுள்ளார்.
அதை கேட்டு ஆஸ்திரேலியா ஊடக நிபுணர்கள் விராட் கோலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின், செய்தியாளர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர். இதனால் அங்கு சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.