4 மாசத்துல கல்யாணம், பொண்ணு பார்த்தாச்சு..காதல் தான்!! ஹாப்பி நியூஸ் சொன்ன விஷால்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஷால் பல படங்களில் நடித்து மிகப்பெரிய இடத்தினை பிடித்தார். நடிகர் சங்க பொறுப்பில் இருந்து வந்த விஷால், சமீபகாலமாக பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
விஷால்
சமீபத்தில் நடந்த திருநங்கை அழகி போட்டியில் சிறப்பு விருந்தினராக விஷால் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது மேடையில் நின்று கொண்டிருந்த விஷால் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் அங்கிருந்தவர்கள் பதறியபடி விஷாலை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
விஷாலும் சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் போனதால் தான் அப்படியானதாக கூறப்பட்டது. ஆனால், விஷால் குடித்துவிட்டு வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்று சிலர் கருத்துக்களை கூறி விமர்சித்து வந்தனர்.
ஆனால் எனக்கு உடல்நிலை சரியில்லாததால் தான் நான் அப்படி காணப்பட்டேன். நான் குடிப்பதையும் புகைப்பிடிப்பதையும் நிறுத்தி பல வருடங்களாகிறது என்று கூறியிருந்தார்.
4 மாசத்துல கல்யாணம்
இந்நிலையில் பல நடிகைகளுடன் சேர்த்து வைத்து திருமண வதந்தி பரவியதை அடுத்து, தனக்கு விரைவில் கல்யாணம் நடக்கப்போகிறது என்று கூறியுள்ளார். நடிகர் சங்க கட்டிடத்தின் பணி முடிந்த பிறகு தான் திருமணம் என கூறியிருந்தேன், அந்த வேலை விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது.
சில மாதத்தில் பணிகள் முடிந்துவிடும். ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடிகர் சங்க கட்டிடத்தின் திறப்புவிழா நடத்த திட்டிருக்கிறோம். அதன்பின் ஆகஸ்ட் 29 ஆம் தேதி பிறந்தநாள் என்பதால் திருமணம் பற்றி அறிவிப்பேன். என்னுடையது காதல் திருமணமாக இருக்கும், செப்டம்பர் மாதம் கண்டிப்பாக திருமணம் நடக்கும் என்று விஷால் அதிகாரப்பூர்வமாக பேட்டியொன்றில் அறிவித்துள்ளார்.