ஒரே வார்த்தை அஜித்தை அசிங்கப்படுத்திய நடிகர்? வைரலாகும் விஷால் வீடியோ
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஷால். செல்லமே படத்தில் நடிகராக அறிமுகமாகிய விஷால் சண்டகோழி. திமிரு, தாமரபரணி உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்து வந்தார். இதன்பின் அவன் இவன் படத்தில் முற்றிலும் வேறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து பிரம்மிக்க வைத்தார்.
பின் அவர் நடித்த வெடி, சமர், பட்டத்து யானை, ஆம்பள, பாயும் புலி போன்ற தோல்வி படங்களை கொடுத்தார். 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்கத்தின் பொருளாளராக பணியாற்றி வந்தார். அதன்பின் 2017ல் தயாரிப்பாளர் சங்கத்திலும் அவரின் அணி வெற்றிப் பெற்றது.
இதற்கிடையில் பல சர்ச்சைகளில் சிக்கி வந்த விஷால் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் அஜித்தை பற்றி பேசியுள்ளார். நடிகர் அஜித் பல ஆண்டுகளாக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்து வருகிறார். இது ஒருசில பேருக்கு பிடிக்காமல் விமர்சிக்கவும் செய்து வந்தனர்.
அந்தவகையில் அஜித்திடம் பிடிக்காத ஒன்று என்ன என்று பேட்டியில் கேட்கப்பட்டது. அதற்கு விஷால், அஜித்திடம் பிடிக்காதது என்றால் அது எங்கும் பார்க்க முடியாமலும் சந்திக்க முடியாமல் இருப்பது தான். இதை அவரது மேனேஜர் சுரேஷ் சந்திராவிடமே கூறியிருந்தேன்.
ஒரு விசயத்திற்காக கூப்பிடும் போது அவரை சந்திக்க முடியாமல் இருந்த நிலை ஏற்பட்டது. இதுதான் அஜித்திடம் பிடிக்காத ஒன்றாக இருக்கிறது. இதற்கு அஜித் ரசிகர்கள் அவரது தனிப்பட்ட விசயம் என கூறி வருகிறார்கள்.
I dnt like this thing in #Ajith Says #Vishal pic.twitter.com/nF6GeFP14r
— chettyrajubhai (@chettyrajubhai) July 7, 2022