நடிகை ஸ்ரீரெட்டி பண்ண சேட்டைகள்... வாயை திறந்த நடிகர் விஷால்..

Vishal Gossip Today Sriya Reddy Actress
By Edward Aug 29, 2024 07:30 AM GMT
Report

விஷால் 48-வது பிறந்த நாள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஷால் தன்னுடைய 48-வது பிறந்த நாளை இன்று ஆகஸ்ட் 29 அன்று கொண்டாடியுள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளாக ஆதரவற்ற முதியவர்களுடன் பிறந்தநாளை கொண்டாடி வரும் விஷால் இந்த ஆண்டும் காலை உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கியிருக்கிறார். அதை முடித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த விஷால், கேரளா திரைத்துறையில் பாலியல் வன்கொடுமை நடக்கும் விஷயம் பற்றிய கேள்வி கேட்கப்பட்டது.

நடிகை ஸ்ரீரெட்டி பண்ண சேட்டைகள்... வாயை திறந்த நடிகர் விஷால்.. | Vishal Talk About Srireddy Case Viral News Adjust

நடிகைகளுக்கு 20 சதவீதம் வாய்ப்பு கிடைக்கிறது. 80 சதவீதம் ஏமாற்றம் நடக்கிறது. அது அவர்கள் சுதாரிக்க வேண்டும். எந்த கம்பெனிக்கு சென்றாலும் அதுபற்றி அறிந்து போகவேண்டும்.

தமிழிலும் ஹேமா கமிட்டி போன்று ஆரம்பமாகும். ஒருத்தன் பையத்திக்காரத்தனமாக பெண்ணை மதிக்காமல் அவர்களை பயன்படுத்த முயற்சிப்பார்கள். அந்த பெண்மணிக்கு தைரியம் வந்து அவனை செருப்பால் அடிக்கவேண்டும்.

நடிகை ஸ்ரீரெட்டி பண்ண சேட்டைகள்... வாயை திறந்த நடிகர் விஷால்.. | Vishal Talk About Srireddy Case Viral News Adjust

ஸ்ரீரெட்டி யாருன்னே தெரியாது

மேலும் பேசிய விஷாலிடம் செய்தியாளர் ஒருவர், உங்கள் மீதே நடிகை ஸ்ரீரெட்டி புகார் அளித்திருக்கிறார்களே என்று கேட்டுள்ளார். ஸ்ரீரெட்டி யாருன்னே எனக்கு தெரியாதுங்க, அவங்க பண்ண சேட்டைகள் தான் தெரியுமே தவிர அவங்க யாருன்னே தெரியாது.

இவர்கள் இப்படி பண்ணாங்க, அவங்க அப்படி பண்ணாங்கன்னு சொல்வது தவறாக இருக்கிறது. என்ன நடந்தது என்ற உண்மை தெரியணும், நாங்கள் போலிஸ் கிடையாது. எங்கள் பார்வைக்கு வந்தால் நடவடிக்கை எடுப்போம். அப்படி கேட்டால் செருப்பால் அடிங்கள் என்று விஷால் தெரிவித்துள்ளார்.