17 வயசு அஜித்தில் ரீல் மகள் அனிகாவா இது! நயனுக்கே டஃப் கொடுப்பாங்களோ
அஜித் குமார் நடிப்பில் 2014ல் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான படம் என்னை அறிந்தால். இப்படத்தில் திரிஷா - அஜித்தின் ரீல் மகளாக நடித்து குட்டி நட்சத்திரமாக தமிழில் அறிமுகமாகியவர் அனிகா சுரேந்திரன்.
இப்படத்தில் கிடைத்த வரவேற்பு மலையாள குட்டி நட்சத்திரமாக மிருதன், நானும் ரவுடி தான், பாஸ்கர் த ராஸ்கல், தி கிரேட் ஃபாதர் போன்ற படங்களில் நடித்து வந்தார். அதன்பி நடிகர் அஜித், நயன் தாரா நடித்த விசுவாசம் படத்தில் அவர்களுக்கு மகளாக ஸ்வேதா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றார்.
இப்படத்தில் கிடைத்த மார்க்கெட்டை பயன்படுத்தி சிறு வயதிலேயே போட்டோஷூட் பக்கம் சென்றார். இளம் நடிகைகளுக்கு இணையான போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை ஈர்த்து வந்த அனிகா 7 வயதில் கதாநாயகியாக தெலுங்கு படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் குட்டி நயன் தாரா என்று பலரால் புகழப்படும் அனிகா வாசுவின் கர்ப்பிணிகள் என்ற படத்தில் கர்ப்பமான ரோலில் நடித்துள்ளார். தற்போது நடிகை நயன் தாராவையே மிஞ்சும் அழகில் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார் அனிகா.


