கமல் ஹாசனை இத்தனை வருடங்களாக ஒதுக்கி வந்த மறைந்த நடிகர் விவேக்.. இது தான் காரணம்..

Kamal Haasan Gossip Today Vivek
By Edward Sep 25, 2022 11:20 AM GMT
Report

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக திகழ்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தவர் நடிகர் விவேக். கடந்த ஆண்டுகளுக்கு கொரோனா வைரஸில் இருந்து மீண்டும் வந்த நிலையில் மாரடைப்பால் மரணமடைந்தார்.

இந்த சம்பவம் இந்திய திரையுலகினரை அதிர்ச்சியடையச் செய்தது. இந்நிலையில் கமல் ஹாசனின் இந்தியன் 2, அண்ணாச்சியின் தி லெஜண்ட் படங்களில் நடித்து வந்தார். ஆனால் விவேக்கின் மறைவிற்கு பிறகு அவரது காட்சிகள் நீக்கப்பட்டு ரீகிரியேட் செய்யப்பட்டது.

நடிகர் விவேக் இத்தனை ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் கமல் ஹாசனுடன் இணைந்து படங்களில் நடிக்கவே இல்லை. அது இந்தியன் 2 படத்தில் தான் நிறைவேற இருந்தது.

ஆனால் கடைசி வரை நிறைவேறவில்லை என்று கூட கமல் ஹாசன் உருக்கமாக கூறியிருந்தார். தற்போது விவேக் சில ஆண்டுகளுக்கு முன் மேடையில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியது. 2015ல் விவேக் கதாநாயகனாக நடித்து வெளியான படம் பாலக்காட்டு மாதவன்.

அப்படம் பல தியேட்டர்களில் பல நாடுகளில் வெளியாகவிருந்தது. ஆனால் அப்போது பாகுபலியுடன் மோதவிருந்த கமல் ஹாசனின் பாபநாசம் படம் என் படத்துடன் மோதியது.

பிளான் போட்டு செய்த கமல் ஹாசனால் பாலக்காட்டு மாதவன் படத்திற்கு பெரிய நஷ்டத்தை கொடுத்தது என்று கூறியிருந்தார் விவேக்.