தம்பி பற்றி உருக்கமான தகவலை கூறிய விவேக்கின் அக்கா! வைரலாகும் வீடியோ
தமிழ் சினிமாவின் ஜாம்பவான் கமெடியனாக திகழ்ந்தும் மரங்களை நட்டு சமுக விழிப்புணர்வு செய்தும் மக்கள் மனதை ஈர்த்து வந்தவர் நடிகர் விவேக். கடந்த ஏப்ரம் மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழ்ந்தது தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பிரபலங்களுக்கு பெரிய அதிச்சியை ஏற்படுத்தியது.
அவர் பற்றிய அனுபவங்களை பிரபலங்கள் அவருக்கு நெருக்கமாக இருந்தவர்கள் பகிர்ந்து வருகிறார்கள். அந்தவகையில், பிரபல தொலைக்காட்சியில் சின்ன கலைவாணர் விவேக் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளது. அந்நிகழ்ச்சியில் நடிகர் விவேக்கின் சகோதரி கலந்து கொண்டு சில அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
அதில் விவேக் இசையில் மிகப்பெரிய ஆர்வம் கொண்டவர். ஹார்மோனியம் வாசிப்பதை பார்த்து எப்படி டா என்று கேட்டேன். அது தானா வருது என்று கூறுவான். மேலும், பிள்ளையார் கோவிலில் ருப்புதேரா மஸ்தானா பாடலுக்கு இசையமைத்து பாடுவான். இங்கு பாடும் பாட்டா இது என்று கேட்டேன் என்று உருக்கமாக கூறியுள்ளார்.