பிக்பாஸ் சீசன் 7ல் VJ அஞ்சனாவா!! கடுப்பாகி அவரே கூறிய உண்மை தகவல்..
பிரபல தொலைக்காட்சி சேனல்களில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் விஜே அஞ்சனா. சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சி சேனல்களில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த அஞ்சனா, கயல் பட நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்தார்.
திருமணமாகி ஒரு மகனை பெற்றெடுத்தும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அடக்கவுடக்கமான இருந்த அஞ்சனா திருமணத்திற்கு பின் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் லைவ்வில் பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கு போறீங்களா என்று ஒருவர் கேட்டுள்ளார்.
அதற்கு விஜே அஞ்சனா, திரும்ப திரும்ப கேக்குறேன்! இதெல்லாம் நமக்கு தேவையா கோபி என்று காமெடியாக சிரித்தபடி இமோஜியை பதிவிட்டு ரீப்ளே செய்திருக்கிறார்.