அறுவை சிகிச்சை முடிந்து மீண்டும் பழைய நிலை! 15 நிமிடம் நிற்க கொஞ்சம் கஷ்டம்..விஜே அர்ச்சனா

anchor television vjarchana
By Jai Aug 28, 2021 01:00 PM GMT
Report

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் விஜே அர்ச்சனா. சமீபத்தில் பிக்பாஸ் 4 நிகழ்ச்சி பிறகு சில பிரச்சனைகளை சந்தித்தார். அதை காதில் போட்டுக்கொள்ளாமல் தன் மகளுடன் இணைந்து யூடியூப் சேனலை நடத்தி வந்தார்.

இந்நிலையில், மூளையில் ஏற்பட்ட திரவக்கசிவு காரணமாக அறுவை சிகிச்சையை சமீபகாலத்தில் செய்து முடித்தார். அதனால் ஒருசில காலங்கள் ஓய்வு எடுக்க நேரும் என்று கூறியுள்ளனர். தற்போதும் பாதி உடல்நிலை சரியான நிலையில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். அப்போது நிகழ்ச்சிகளுக்கு எப்போ திரும்புவீர்கள் என்ற கேள்விக்கு, இப்போதே வரத்தயார். ஆனால் எனது வலது கால் தொடையில் மொத்தம் 16 தையல்கள் போடப்பட்டுள்ளது.

தோல் சதைகள் எடுத்து அங்கு பொருத்தப்பட்டுள்ளதால் செரிப்ரோஸ் பைனல் திரவக் கசிவு அடைக்கப்பட்டது. இதனால் என்னால் 15 அல்லது 16 நிமிடங்கள் நிற்கமுடியாது. கால்கள் இன்றும் பலவீனமாக இருப்பதால் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க சில நாட்கள் ஆகும் என்றும் மீண்டும் ஒரு பரிசோதனை இருக்கிறது என்றும் கூறியுள்ளார் விஜே அர்ச்சனா.