அதற்கு அனிருத்தும் ஓகே சொல்லிட்டாரு, ஆனால் வற்புறுத்தியும் எனக்கு விருப்பம் இல்லை!! ஓப்பனாக கூறிய தொகுப்பாளினி டிடி..
சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர் தான் டிடி. விஜய் டிவியில் இருந்து விலகி ஒருசில முக்கிய நடிகர்கள் படங்களின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து சில பதிவுகளையும் பகிர்ந்து வருகிறார்.
தனக்கு ஒரு நிகழ்ச்சியில் தனக்கு செட்டாகவில்லை என்றால் பிரடெக்ஷன் டீமிடம் கூறிவிட்டு அதற்கான தீர்வை காண்பார் என்று பல முறை கூறியிருந்தார். பேட்டி ஒன்றில் பங்கேற்ற டிடி பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அப்படி ஒரு முறை இசையமைப்பாளர் அனிருத்தை நேர்காணல் எடுக்கும் சமயத்தில் அதற்கு முன் சில மாதங்களாக அவர் சம்பந்தமான லீக்ஸ் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பானது.
அதன்பின் காஃபி வித் டிடி நிகழ்ச்சியில் அனிருத் கலந்து கொண்டிருக்கிறார். விருந்தினராக வந்த அனிருத்திடம் ஒரு கேள்வியை கேட்க வேண்டும் என்று ஷோ புரொடியூசர் கூறினார்.
ஆனால் அந்த கேள்வியை கேட்கவில்லை. டாக் பேக்கின் வழியாக அந்த கேள்வியை கேட்குமாறு கூறிக்கொண்டே இருந்தார் ஷோ புரொடியூசர். மேலும் அனிருத் கூட அந்த கேள்வியை கேட்க ஓகே சொல்லிவிட்டார், நீ அதை கேளு என்று கூறினார்.
இருப்பினும் அந்த கேள்வி தவிர்த்துவிட்டு வேற கேள்வி கேட்டேன். எனக்கு சில கேள்விகள் தவறாக இருந்தால் அதை கேட்க மாட்டேன் என்று அப்போதே கூறியிருக்கிறார். ஆனால் இதை சிலர் தேவையில்லாத கருத்தினை பகிர்ந்து டிடி-யை கிண்டலடித்து வருகிறார்.