தவறாக சித்தரித்து லீக்கான மார்பிங் வீடியோ!..வேதனையுடன் விளக்கம் கொடுத்த கல்யாணி
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சின்னத்திரையில் ஜொலித்தவர் நடிகை கல்யாணி. இவர் பிரிவோம் சந்திப்போம், தாயுமானவன், ஆண்டாள் அழகர், போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.
மேலும் கல்யாணி சின்னத்திரை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி உள்ளார். இவர் கடந்த 2014 -ம் ஆண்டு ரோகித் என்பவரை திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார். இவருக்கு தற்போது 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார்.
2016 -ம் ஆண்டு முதுகின் தண்டுவடம் பிரச்சினை காரணமாக அறுவை சிகிச்சை நடந்துள்ளதாம். தற்போது மீண்டும் அவர் முதுதண்டில் அறுவை சிகிச்சை செய்ய போவதாக கூறி இருந்தார்.
இதையடுத்து கல்யாணி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போன்ற வீடியோ வெளியானது. இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கினார்கள்.
இந்நிலையில் சிகிச்சை பெறுவது போன்ற வெளியான வீடியோ மார்பிங் செய்யப்பட்டது என்றும் சோசியல் மீடியாவில் வரும் தவறான செய்திகளை நம்ப வேண்டாம் என்று இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.