அம்மாவாகிட்டா இப்படி கவர்ச்சியா ஆடக்கூடாதா..மகனை வைத்தே!! VJ மகேஸ்வரி காட்டம்..

Bigg Boss Vj Maheswari Tamil Actress Actress
By Jai May 27, 2026 06:30 AM GMT
Report

VJ மகேஸ்வரி

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமானவர் தான் விஜே மகேஸ்வரி. சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட மகேஸ்வரி, ஒருசில படங்களில் நடித்து வந்தார்.

அம்மாவாகிட்டா இப்படி கவர்ச்சியா ஆடக்கூடாதா..மகனை வைத்தே!! VJ மகேஸ்வரி காட்டம்.. | Vj Maheshwari Opens Why Doing Kirukku Sirukki

21 வயதில் திருமணமாகி ஆண் குழந்தைக்கு அம்மாவானார் மகேஸ்வரி. கணவரைவிட்டு பிரிந்து தனியாக மகனுடன் வாழ்ந்து வரும் மகேஸ்வரி, தற்போது கிறுக்கு சிறுக்கி என்ற வீடியோ பாடலில் கிளாமர் லுக்கில் ஆட்டம் போட்டுள்ளார்.

அம்மாவாகிட்டா

இதுகுறித்து பேசிய மகேஸ்வரி, எந்தளவுக்கு கவர்ச்சி காட்ட வேண்டும், கவர்ச்சிக் காட்டக்கூடாது என்பது எனக்கு தெரியும். அம்மாவான பின் ஏன் இப்படியெல்லாம் ஆடுறீங்க, நடிக்கிறீங்க என்ற கேள்விகளை எல்லாம் ரொம்பவே பூமர் தனமானது. இந்த காலத்து பிள்ளைகள் எல்லாம் அதையெல்லாம் பொருட்டாவே எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.

அம்மாவாகிட்டா இப்படி கவர்ச்சியா ஆடக்கூடாதா..மகனை வைத்தே!! VJ மகேஸ்வரி காட்டம்.. | Vj Maheshwari Opens Why Doing Kirukku Sirukki

எனக்கு என்ன புடிச்சிருக்கோ அதை மட்டும் தான் நான் செய்வேன். என்னை மட்டுமின்றி என் மகனைக்கூட விடாமல் ஏஐ மூலமாக ஆபாசமாக சித்தரித்து அசிங்கப்படுத்தினர்.

அதனால் சைபர் கிரைமில் எல்லாம் புகாரளித்துள்ளே. சமூக வலைத்தளங்கள் வருவதற்குமுன் வரை என்னை எல்லாம் பொதுவெளியில் பார்த்தால் அந்தளவுக்கு மரியாதை கொடுப்பார்கள்.

அம்மாவாகிட்டா இப்படி கவர்ச்சியா ஆடக்கூடாதா..மகனை வைத்தே!! VJ மகேஸ்வரி காட்டம்.. | Vj Maheshwari Opens Why Doing Kirukku Sirukki

இப்போ, சோசியல் மீடியா புல்லிங் தான் அதிகளவில் இருக்கிறது. சோசியல் மீடியா மூலமாகத்தான் ரசிகர்களை கனெக்ட் செய்ய முடிகிறது, ஆனால் அந்த இடத்திலேயே அசிங்கமான ஆபாச எண்ணங்களை ஏஐ மூலம் விதைப்பது ரொம்பவே வேதனையாக இருக்கிறது என்று போல்டாக பேசியிருக்கிறார் மகேஸ்வர்.

மே 27ஆம் தேதி மாலை 5 மணிக்கு கிறுக்கு சிறுக்கி ஆல்பம் பாடல் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.