திருமணமாகி மூன்று ஆண்டுகள் கழித்து தனது குடும்பத்துடன் இணைந்த VJ மணிமேகலை, சமாதானம் ஆகாத அப்பா..!
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமாகி உள்ளவர் தான் மணிமேகலை. இவர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார் என்ற கூறலாம்.
இந்நிலையில் இவர் உசேன் என்பவரை சில வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்திற்கு மணிமேகலையின் பெற்றோர் மற்றும் சகோதரர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். மேலும் தங்களின் பெற்றோர் தங்களை ஏற்றுக்கொள்ளாதது குறித்து ஒரு நிகழ்ச்சியில் வருத்தம் தெரிவித்து இருந்தார் மணிமேகலை.
இதனிடையே திருமணமாகி மூன்று ஆண்டுகள் கழித்து தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார் மணிமேகலை. ஆம் அவரின் அம்மா மற்றும் சகோதரர் உடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அவரின் தந்தை மட்டும் தான் தற்போது வரை சமாதானம் ஆகவில்லை என கூறப்படுகிறது. இதோ அவர்களின் புகைப்படம்..