சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மேடையில் கண்ணீர் விட்டு கதறி அழுத விஜே பிரியங்கா!! இதுதான் காரணம்..
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். தற்போது 9வது சீசன் ஆரம்பிக்கப்பட்டு வரும் நிலையில் மாகாபா ஆனந்த் மற்றும் விஜே பிரியங்கா நிகழ்ச்சியை தொகுத்ய்து வழங்கி வருகிறார்கள்.
இருவரும் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்குவதற்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அதில் விஜே பிரியங்கா எப்போது சிரித்துகொண்டே இருப்பது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். அப்படியிருக்கும் பிரியங்கா சமீபத்தில் எபிசோட்டில் கண்ணீர் விட்டு அழுதுள்ளது நெகிழவைத்துள்ளது.

நாளை ஒளிப்பரப்பாகவுள்ள நிகழ்சியின் பிரமோ வீடியோ வெளியாகியதில் போட்டியாளர் சந்திரன் பாடி முடித்துள்ளார். அப்போது சிங்கிள் அம்மாவாக இருந்து என்னையும் என் சகோதரியையும் வளர்ந்து இருக்கிறார்.
சந்திரனின் அம்மா பேசியதில் விஜே பிரியங்கா கண்ணீர் விட்டு அழுது, சிங்கிளாக இருக்கும் அனைத்து பெற்றோர்களையும் பாராட்டியிருக்கிறார். இதற்கு காரணம் பிரியங்காவின் அம்மாவும் ஒரு சிங்கிள் அம்மாவாக இருந்துதான் இந்த இடத்திற்கு கொண்டி சேர்த்திருக்கிறார். அதற்கு பிரியங்காவிற்கு ஆறுதல் கூறி அவரது ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.