கணவர் பற்றி வாய்த்திறக்காத விஜே பிரியங்கா!! விவாகரத்து செய்யாமல் மெளனமாக செய்த செயல்..
பிரியங்கா டெஸ்பாண்டே
பிரபல தொலைக்காட்சி சேனலில் பலர் தொகுப்பாளர்களாக பணியாற்றி வேறு ஒரு பாதையில் சென்றுவிடுகிறார்கள். அப்படி எங்களுக்கு இந்த வேலையே போதும் என்று கூறும் அளவிற்கு தங்கள் விஜே பணியினை சிறப்பாக செய்து வருபவர்கள் மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா. பிரியங்கா டெஸ்பாண்டே விஜேவாக பணிக்கு வருவதற்கு முன்பில் இருந்தே மாகாபா ஆனந்த் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி உட்பட சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். டிடி, சிவகார்த்திகேயன், கோபிநாத், பாவனா, ரம்யா, தியா உள்ளிட்ட பலருடன் பணியாற்றியும் இருக்கிறார் மாகாபா.
பிரவீன் குமார்
பிரியங்காவை நிகழ்ச்சிக்கு அறிமுகம் செய்து வைத்து இந்த நிலைக்கு கொண்டு வந்தவரும் மாகாபா தானாம். தற்போது வரையில் இருவரும் நிகழ்ச்சியை கொண்டு செல்லும் விதம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்று வருகிறது. பிரியங்கா கடந்த 2016ல் பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதே தொலைக்காட்சியில் டெக்டினியனாக பணியாற்றி வந்த போது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொணடனர். திருமணத்திற்கு பின் ஒருசில இடங்களில் மட்டும் அடையாளப்படுத்தினார் பிரியங்கா.
மியூட் அல்லது டெலீட்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எந்தவொரு அறிவிப்பு கணவர் பிரிவீன் பற்றிய கருத்துக்கள் இடம் பெறாமல் இருந்து வந்தது, இதற்கு காரணம் முற்றிலுமாக பிரியங்கா கணவரை பிரிந்து விட்டார் என்பது தான். அம்மாவுடன் வசித்து வரும் பிரியங்கா தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி வெளிப்படையாக மறைத்து வருகிறார் என்பதை ரசிகர்கள் கேள்வியாக கேட்டு வந்தனர்.
இந்நிலையில் பிரியங்கா தன் கணவருடன் எடுத்த புகைப்படங்களை அமைதியாக மியூட் அல்லது டெலீட் செய்துள்ளாராம். இதுவரையில் கணவர் பற்றி எந்த மேடையில் கூட அதுவும் பிக்பாஸ் மற்றும் சூப்பர் சிங்கர் மற்றும் இதர நிகழ்ச்சிகளில் கூட பேசாமல் இருந்து வருகிறார். மேலும் விஜய் டிவி பிரபலங்களுடன் ஊர் சுற்றும் பிரியங்கா கணவருடன் எங்கும் செல்லாமல் இருந்து வருகிறார். அப்படி என்றால் அமைதியாக தன் கணவரிடம் இருந்து பிரிந்து விட்டார் என்ற கேள்வியும் தொலைக்காட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
