சூப்பர் சிங்கர் ஜூனியரில் விஜே பிரியங்கா இல்லையா!! இது தான் காரணமாம்..
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மிகப்பெரிய ஆதரவை பெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்நிகச்ச்சியில் பங்கேற்கும் பல போட்டியாளர்கள் சினிமாத்துறையில் நல்ல இடத்தினை பிடித்து வருகிறார்கள்.
அதேபோல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் மாகாபா ஆனந்த் மற்றும் விஜே பிரியங்கா உலக மக்களின் மிகப்பெரிய ஆதரவையும் பெற்று வருகிறார்கள். சமீபத்தில் நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் 9 சீசனையும் இருவரும் தொகுத்து வழங்கினார்கள்.
இடையில் இருவரில் ஒருவர் வேறொரு வேலைக்காக சென்ற போது அவர்களுக்கு பதில் KPY குரேஷி இணைந்து தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் சூப்பர் சிங்கர் சீனியர் 9 முடிந்த சில நாட்களில் ஜூனியர் நிகழ்ச்சியை விஜய் டிவி ஆரம்பிக்கவுள்ளது.
அதற்காக சூப்பர் சிங்கர் முன்னாள் ஜூனியர் போட்டியாளர்களை வைத்து ஒரு எபிசோட் நடந்துள்ளது. ஆனால் அந்நிகழ்ச்சியில் விஜே பிரியங்கா கலந்து கொள்ளாமல் அவருக்கு பதில் குரேஷி மாகாபா ஆனந்துடன் தொகுத்து வழங்கியுள்ளார்.
பிரியங்கா கலந்து கொள்ளாததற்கு காரணம், ஜெர்மனியில் நடைபெறும் இசையமைப்பாளர் அனிருத் இசை கச்சேரியை தொகுத்து வழங்க சென்றுள்ளது தானாம்.
சில தினங்களுக்கு முன் அவர் ஜெர்மனி சென்று கச்சேரியில் கலந்து கொண்டதால் தான் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் வரமுடியவில்லை என்று கூறப்படுகிறது.