இனி நான் விஜே கிடையாது! டிவியை விட்டு விலக முடிவெடுத்த பிரியங்கா

Priyanka Deshpande Super Singer
By Edward May 28, 2022 05:20 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் விஜே பிரியங்கா. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பல சீசன்களை மாகாபா ஆனந்துடன் இணைந்து தொகுத்து வழங்கி வந்த பிரியங்கா சமீபத்தில் பிக்பாஸ் 5 சீசனில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தினை பிடித்தார்.

தன்னுடைய திறமையில் ஏற்கனவே ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருந்த பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மக்கள் மத்தியில் நல்ல ஒரு இடத்தினை பிடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியால் பல எபிசோட்டிற்கு வரமுடியாமல் இருந்த பிரியங்கா மீண்டும் மாகாபாவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

சில நாட்களுக்கு முன் தன்னுடைய 30வது பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா கேபிஒய் பாலாவுடன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் 30 வயதாகியதால் இனிமே விஜேவாக பணியாற்றப்போவதில்லை என்ற முடிவை எடுக்கவுள்ளதாக பாலாவிடம் கூறினார்.

அதற்கு பாலா, மைக்கை பிடித்தவர்கள் எல்லாம் ஆங்கர் ஆகிவிட முடியாது, மைக்கிற்கே பிடித்தவங்க தான் ஆங்கர். நீயே நினைத்தாலும் அது உன்னை விடாது என்று கலகலப்பாக கூறி கலாய்த்தும் இருக்கிறார்.

இதனால் பிரியங்காவும் தன் முடிவை மாற்றி இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் அந்த சிரிப்பை முதலில் அடக்கு இல்லை விஜேவை நிறுத்து என்று காமெடியான கருத்துக்களை பிரியங்காவிற்கு கூறி வருகிறார்கள்.