லட்சத்தில் புறளும் தொகுப்பாளினி பிரியங்கா!! ஒரு நாள் சம்பளமே இவ்வளவா?
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருபவர் விஜே பிரியங்கா. தன்னுடைய காமெடியான பேச்சு வழக்கில் நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டு சென்று வருகிறார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மாகாபா ஆனந்துடன் இணைந்து தொகுத்து வழங்கி வந்த பிரியங்கா கடந்த பிக்பாஸ் 5 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பிடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியால் அவர் தொகுத்து வழங்கி வந்த சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க முடியாமல் போனது.
இதன்பின் நண்பர்களுடன் அவுட்டிங், போட்டோஷூட் என நாட்களை கடந்த பின் தான் சூப்பர்சிங்கர் நிகழ்ச்சிக்கே சென்றார். உடனே சிறந்த பெண் தொகுப்பாளினி விருதினையும் விஜய் தொலைக்காட்சி பிரியங்காவிற்கு கொடுத்தது. இதனை பலர் விமர்சித்து கருத்துக்களையும் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் பிரியங்கா ஒரு நாளை ஒரு நிகழ்ச்சிக்கு எவ்வளவு சம்பலம் வாங்குகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஒரு எபிசோட்டிற்கு 2 லட்சம் வரை சம்பளமாக விஜே பிரியங்கா வாங்கி வருகிறாராம். இதுதவிர பிக்பாஸ் 5 ரன்னர் அப்பில் வாங்கிய சம்பளம், யூடியூப், விளம்பரம் என பல விதத்தில் பிரியங்கா சம்பாதித்து வருகிறார்.