கையில் குழந்தையுடன் விஜே பிரியங்கா? ஆண்ட்டி ஆனதை கலாய்த்தள்ளும் நெட்டிசன்கள்..

Priyanka Deshpande
By Edward Jun 16, 2022 01:10 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மாகாபா ஆனந்துடன் தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருபவர் விஜே பிரியங்கா.

சூப்பர் சிங்கர், ஸ்டார் மியூசிக் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தன்னுடைய தனித்துவமான பேச்சியில் பலர் தன்னை கலாய்த்தாலும் சகஜமாக எடுத்துக்கொண்டு காமெடியாக எடுத்துக்கொண்டு வருபவர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு தொலைக்காட்சி சேனலில் வேலை செய்த பிரவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதன்பின் பிக்பாஸ் 5 சீசனில் கலந்து கொண்ட பிரியங்கா மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.

ரன்னர் அப் இடத்தினை பிடித்த பிரியங்கா நிகழ்ச்சிக்கு பிறகு நண்பர்களுடன் ஊர் சுற்றியும் யூடியூப் சேனலை நடத்தியும் வருகிறார். சில வாரங்களுக்கு முன் பிரியங்காவின் தம்பி ரோஹித் மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தியை கூறினார்.

தற்போது அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதையும், நான் அத்தை ஆய்ட்டேன் என்று கூறியும் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கையில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் உங்களுக்கு எப்போது மேடம் குழந்தை என்று கேலி செய்து வருகிறார்கள்.

ஏற்கனவே கணவருடன் பிரியங்கா பிரிந்து விட்டார் என்ற வதந்திகளும் இணையத்தில் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.

Gallery