சாவு வீட்டில் கூட கண்டெண்ட் கேக்குறீங்க, தப்பா பேசுறீங்க!! கடுப்பாகிய விஜே சித்து..

Youtube Gossip Today Actors Tamil Actors
By Edward Aug 28, 2024 05:30 AM GMT
Report

பிஜிலி ரமேஷ்

யூடியூப் சேனல்கள் வைத்து பிரபலமானவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அந்தவரிசையில் விஜே சித்து நடத்திய பிராங்க் ஷோ மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் பிஜிலி ரமேஷ்.

சாவு வீட்டில் கூட கண்டெண்ட் கேக்குறீங்க, தப்பா பேசுறீங்க!! கடுப்பாகிய விஜே சித்து.. | Vj Siddhu Gets Anger In Bijili Ramesh Death Home

அந்த வீடியோ டிரெண்ட்டாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற பிஜிலி ரமேஷ், கோமாளி, நட்பே துணை, காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களில் நடித்து காமெடி நடிகராகினார். இதனை தொடர்ந்து சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் கல்லீரல் பிரச்சனை ஏற்பட்டு படுத்தப்படுக்கையில் இருந்தார்.

தொடர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிகப்பட்டு வந்த பிஜிலி ரமேஷ் நேற்று ஆகஸ்ட் 27 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இந்த விஷயம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், நேற்று பிகிலி ரமேஷின் இறுதி சடங்கிற்கு விஜே சித்து சென்று தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார்.

சாவு வீட்டில் கூட கண்டெண்ட் கேக்குறீங்க, தப்பா பேசுறீங்க!! கடுப்பாகிய விஜே சித்து.. | Vj Siddhu Gets Anger In Bijili Ramesh Death Home

கடுப்பாகிய விஜே சித்து

இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய விஜே சித்து, ஒரு செய்தியாளர் காலையிலிருந்து நின்று கொண்டிருக்கிறோம், ஏதாவது கண்டெண்ட் கொடுத்துவிட்டு போங்க என்று கூறினார்.

சாவு வீட்டிலுமா கண்டெண்ட், கண்டெண்ட்டுக்காக நாங்கள் வரவில்லை, தப்பா பேசுறீங்க. எங்களால் மட்டும் அவர் வளரவில்லை, அவரால் நாங்களும்தான் வளர்ந்து இருக்கிறோம் என்று எமோஷ்னலாக பேசியிருக்கிறார். பிஜிலி ரமேஷுக்கு சித்து 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.