ஏமாற்றிய சீரியல் நடிகர்... காதல் தோல்வியால் வேதனையில் ராஜா ராணி 2 கதாநாயகி?

Star Vijay Serials Gossip Today
By Edward Sep 06, 2022 05:00 PM GMT
Report

சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் ராஜா ராணி. ஆலியா மானாசா, சஞ்சீவ் கார்த்தி இருவரும் முதல் சீசனில் ஜோடியாக நடித்து பிரபலமாகினார். சீரியலும் டாப் இடத்தினை பிடித்து வந்தது.

இந்த சீரியலால் இருவரும் ரீல் ஜோடிகளாக இருந்து ரியல் ஜோடிகளாக திருமணம் செய்து இரு குழந்தைகளை பெற்றுக்கொண்டனர். ஆரம்பத்தில் ராஜா ராணி 2வில் நடித்த ஆலியா விலகி சித்துவுக்கு ஜோடியாக நடிகை ரியா விஷ்வநாதன் நடித்து வந்தார்.

ஆரம்பத்தில் இவரின் நடிப்பை ஏற்க முடியாத ரசிகர்கள் பின் அவரின் நடிப்பை ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் நடிகை ரியா, விஜேவும், பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஷாலை காதலித்து வருவதாக கூறப்பட்டது.

இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் நடிகை ரியா இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்கள் ரீல் வீடியோக்களை பகிர்ந்து வந்தார்.

தற்போது சோகமான காதல் தோல்வி ஸ்டோரிஸ்களை பகிர்ந்து கொண்டு வருகிறார். இதனால் விஜே விஷாலுக்கு ரியாவுக்கு பிரேக்கப் ஆகிவிட்டதா? என்றும் விஜே விஷால் ஏமாற்றியதால் இப்படியான காதல் தோல்வி ஸ்டேட்டர்ஸ்களை பகிர்ந்து வருகிறாரா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGallery