புடவைய தூக்கி கட்டுமா ஏஞ்சலின்.. மேடையில் தொகுப்பாளினியை கலாய்த்த VTV கணேஷ்..
Mufasa: The Lion King
ஹாலிவுட் சினிமாவில் உருவாகி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் Mufasa: The Lion King படம் ரிலீஸாகவுள்ளது. இயக்குநர் பேரி ஜென்கின்ஸ் இயக்கத்தில் டிசம்பர் 20 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள இப்படத்தின் தமிழ் பிரஸ் மீட் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அர்ஜுன் தாஸ், அசோக் செல்வன், நாசர், சிங்கமுத்து, ரோபோ ஷங்கர், விடிவி கணேஷ் உள்ளிட்ட டப்பிங் கொடுத்த கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது மேடையில் பேச வந்த விடிவி கணேஷ், குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
VTV கணேஷ்
அதில் பேசிக்கொண்டே இருந்த விடிவி கணேஷ், தொகுப்பாளினி ஏஞ்சலினை பார்த்து, ஏஞ்சலின் புடவையை தூக்கி கட்டுமா, தடிக்கி விழுந்துற போற என்று கலாய்த்துள்ளார்.
இதற்கு ஏஞ்சலின் இன்னும் எதுவுமே பண்ணலயேன்னு நினைச்சேன் நன்றி சார் மைக்க கொடுங்க என்று கேட்டுள்ளார். தற்போது ஏஞ்சலின் கொடுத்த ரியாக்ஷன் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.