ஜெயிலர் 2ல நான் நடிச்சிருந்தா வசூல் அள்ளியிருக்கும்...வாட்டர்மெலன் ஸ்டார் கொடுத்த ஷாக்..

Rajinikanth Watermelon star diwakar Jailer 2
By Jai Oct 21, 2026 04:30 AM GMT
Report

வாட்டர்மெலன் ஸ்டார்

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி அக்டோபர் 15 ஆம் தேதி ரிலீஸான படம் தான் ஜெயிலர் 2. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 ரிலீஸாகி 5 நாட்களாகிய நிலையில் கிட்டத்தட்ட ரூ. 500 கோடி வரை வசூலித்து சாதனை படைத்து வருகிறது.

ஜெயிலர் 2ல நான் நடிச்சிருந்தா வசூல் அள்ளியிருக்கும்...வாட்டர்மெலன் ஸ்டார் கொடுத்த ஷாக்.. | Watermelon Divakar About Jailer 2 Collection

படத்தை பார்த்த பலரும் தங்கள் விமர்சனத்தையும் கருத்துகளையும் தெரிவித்து வரும் நிலையில், பிக்பாஸ் பிரபலம் வாட்டர்மெலன் திவாகர் பேசிய கருத்து தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நான் நடிச்சிருந்தா

அதில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தா ஜெயிலர் 2 படம் பார்க்க நான் தியேட்டருக்கு போனேன். அங்கிருந்த ரசிகர்கள் எல்லோரும் ஓடிவந்து என்கூட செல்ஃபி எடுத்துக்கிட்டு, வாட்டர்மெலன் ஸ்டார் என்று கத்தும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.

ஜெயிலர் 2ல நான் நடிச்சிருந்தா வசூல் அள்ளியிருக்கும்...வாட்டர்மெலன் ஸ்டார் கொடுத்த ஷாக்.. | Watermelon Divakar About Jailer 2 Collection

ஜெயிலர் 2 படத்தில் மூர்த்தி ரோலில் நான் நடிச்சிருந்தா அந்த காமெடி இன்னும் சூப்பரா இருந்திருக்கும்னு பத்திரிக்கையாளர் ஒருத்தர்கூட எனக்கு போன் பண்ணிச்சொன்னாரு. நான்கூட அப்படி யோசிக்கல.

ஆனா, நான் மட்டும் அந்த ரோலில் நடிச்சிருந்தா ஜெயிலர் 2 படத்தின் வசூல் இன்னும் பங்கரமா அள்ளி இருக்கும். இப்போ சிலர் ஜெயிலர் 3 படத்துல அந்த மூர்த்தி ரோலில் என்ன நடிக்க வைக்கணும்னு பேசுறாங்க என்று பேசியிருக்கிறார் என்று வாட்டர்லெமன் ஸ்டார் திவாகர் பேசியிருக்கிறார். இதனை பார்த்த பலரும் வாட்டர்மெலன் ஸ்டாரை பங்கமாக கலாய்த்து வருகிறார்கள்.