சாமி ஆடுவதற்கு காசு கொடுத்தோமா!! கருப்பு பட இயக்குநர் ஓபன் டாக்..

Suriya RJ Balaji Karuppu Sai Abhyankkar
By Jai May 23, 2026 12:00 PM GMT
Report

கருப்பு

ஆர்ஜே பாலாஜி - சூர்யா கூட்டணியில் கடந்த 15 ஆம் தேதி வெளியான படம் தான் கருப்பு. திரிஷா, இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

சாமி ஆடுவதற்கு காசு கொடுத்தோமா!! கருப்பு பட இயக்குநர் ஓபன் டாக்.. | We Pay For Sami To Play In The Theater Karuppu

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சாய் அபியங்கர் இசையில், வெளியான கருப்பு படம், 8 நாட்களில் உலகளவில் ரூ. 216 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கிறதாம். அதேபோல் தமிழ்நாட்டில் மட்டுமே சுமார் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கிறது.

சாமி ஆடுவதற்கு காசு

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய படத்தின் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி, பேமிலி ஆடியன்ஸுக்காகத்தான் படம் பண்ணினேன், விமர்சனம் பண்றவங்களூக்கு, ஆன்லைன்ல இருக்கிறவங்களுக்கு நான் படம் பண்ணல. நான் படம் ரிலீஸுக்கு முன் இந்த விஷயத்தை சொல்லி இருந்தேன்.

சாமி ஆடுவதற்கு காசு கொடுத்தோமா!! கருப்பு பட இயக்குநர் ஓபன் டாக்.. | We Pay For Sami To Play In The Theater Karuppu

இது மக்களுக்கு பண்ணின படம், அதனால் மக்கள் இந்த படத்தை கொண்டாடுவனக்கன்னு எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. சிலர் படத்தின் தயாரிப்பு நிறுவனமே தியேட்டர்ல சாமி ஆடுறதுக்கு ஆள் அனுப்பிடுவாங்கன்னு சொன்னாங்க.

எங்களால இவ்வளவு பட்ஜெட் செலவு பண்ணி ஆள் அனுப்பியிருக்க முடியாது. மக்களே இந்த படத்தி அவங்க படமா நினைச்சு கொண்டாடுறதுதான் ரொம்ப ஸ்பெஷலாக மாறியிருக்கு என்று நெகிழ்ச்ச்சியுடன் பேசியிருக்கிறார்.