காசு கொடுத்து அதை பார்ப்பது உன் இஷ்டம்!! சப்ஸ்கிரிப்ஷன் பற்றி பேசிய பெண்..
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் கடந்த வாரம் ஒரு பெண் தன் உடை மற்றும் சப்ஸ்கிரைப் வீடியோக்களை பகிர்வது குறித்து விவாதம் விவாதிக்கப்பட்ட விஷயம் தற்போது பலரது விமர்சனத்தை பெற்று வருகிறது.

ஜீ தமிழில் தொகுப்பாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் கடந்த வாரம் பெண் சுதந்திரம் சரியான பாதையில் போகிறதா? இல்லையா என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. அதில் சோசியல் மீடியாவில் சப்ஸ்கிரைப் மூலம் வீடியோக்கள் வெளியிடும் பெண்கள் தவறான பாதையில் போகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
சப்ஸ்கிரிப்ஷன்
அதற்கு ஒரு பெண், எனக்கு பிடித்த ஆடை போட்டு அதை நான் பர்சனலாக தான் வைத்துள்ளேன். அதை எல்லோருக்கும் காட்டுவதில்லை, ஆனால் அதை செலவு பண்ணி பார்க்க நீ ரெடியா இருந்தா, அதுக்கு நான் காசு வாங்கிட்டு காட்டுகிறேன். அதுவும் உனக்கு (ஆண்கள்) விருப்பம் இருந்தால் தான், இல்லை என்றால் அந்த போட்டோக்களை பர்சனலாக தான் மெயிண்டெயின் பண்ணுவேன்.

SO, எனக்கு பிடித்த மாதிரி ஆடை அணிவது என் விருப்பம், அதை காசு கொடுத்து பார்ப்பது உன் விருப்பம், இதில் யாருக்கு என்ன நஷ்டம், எதுக்கு இதை தப்பாக பார்க்கிறீர்கள் என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறார்.
அதற்கு ஆவுடையப்பன், இதை ஒரு தனிப்பட்ட விருப்பம் என்று மட்டும் பார்க்க முடியாது. ஒருவர் மது அருந்துவது, புகைப்பது அவருடைய தனிப்பட்ட விஷயம் என்றாலும் படங்களில் இவற்றை செய்யும் போது அதனால் ஏற்படும் பாதுகாப்புகளை சுட்டிக்காட்டி எச்சரிக்கை வசங்கங்கள் ஏன் இடம்பெறுகிறது. அப்படி யாரும் அதை பின்பற்றக் கூடாது என்பதால் தான்.
அதேபோல் இன்று ஒரு பெண் சோசியல் மீடியாவில் வீடியோவை வெளியிட்டு மாதம் 3 லட்சம் ரூபாய் சம்பாதிப்பது, நாளை இன்னொரு பெண்ணும் இதே வழியை தேர்வு செய்யலாம், படித்து வேறு நல்ல வேலைக்கு போகாமல் இதேபோல் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் உருவாகும், இது தவறான உதாரணம். உடலை காட்டி பணம் சம்பாதிப்பதை நம் தமிழ் மரபு ஊக்குவிக்கவில்லை என்று பதிலடி கொடுத்துள்ளார்.