அமைச்சரானதும் கமலை தூக்கி எறிந்த உதயநிதி!! காக்கா பிடித்த உலக நாயகன்

Kamal Haasan Udhayanidhi Stalin
By Edward Dec 14, 2022 09:03 AM GMT
Report

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மகனாகவும் சேப்பாக்கம் தொகுதியின் எம் எல் ஏ-வாகவும் நடிகராக இருந்து ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் மூலம் விநியோகஸ்தராகவும் பணியாற்றி பன்முகத்திறமையை அடக்கி வைத்திருப்பவர் உதயநிதி ஸ்டாலின்.

தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களை தற்போது விநியோகம் செய்து நல்ல வரவேற்பு பெற்று வருகிறார். அப்படி சமீபத்தில் விக்ரம் படம் முதல் கலகத்தலைவன் வரை படத்தினை வெளியிட்டு வந்தார்.

அமைச்சரானதும் கமலை தூக்கி எறிந்த உதயநிதி!! காக்கா பிடித்த உலக நாயகன் | Wedge That Was Put To Kamal With The Minister

தற்போது மாமனிதன் படத்தில் நடித்து முடித்திருந்த உதயநிதி கமல் ஹாசன் தயாரிப்பில் நடிக்கவுள்ளதாக கூறியிருந்தார். இந்நிலையில் இன்று அமைச்சர் பதவி ஏற்றிருந்த உதயநிதி ஸ்டாலின், இனிமேல் படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

கமல் ஹாசன் தயாரிக்கும் படத்தில் இருந்து தற்போது விலகியுள்ளதாகவும் கூறியுள்ளார். இதனால் கமல் ஹாசன் கொஞ்சம் மன சங்கடத்தில் இருந்தாலும் உதயநிதி அமைச்சரானதற்கு வாழ்த்துக்கூறியும் இருக்கிறார்.

இதற்கு நெட்டிசன்கள் கமல் ஹாசனுக்கு எப்படியாவது உதயநிதியின் உதவி அடுத்தடுத்த படங்களுக்கு தேவை என்பதால் அரசியல் தாண்டி உதயநிதிக்கு வாழ்த்து கூறி பதிவினை போட்டுள்ளார்.