என்னது நான் அரசியல் வாரிசா? விஜய் ஸ்டைலில் பதில் கொடுத்த சத்யராஜ் மகன்..
தமிழ் சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் சினிமாவில் கால் பதித்து தன்னுடைய நடிப்பை வெளிக்காட்டி பிரபலமாகி வருபவர் நடிகர் சத்யராஜ். இவரின் மகள் திவ்யா சத்யராஜ் சமீபத்தில் திமுக கட்சியில் இணைந்திருக்கிறார்.
சிபி சத்யராஜ்
அவரை தொடர்ந்து சத்யராஜின் மகன் சிபி சத்யராஜ், நடிகர் விஜய்யின் தவெக கட்சியை ஆதரித்து வருகிறார். சமீபத்தில் டென் ஹவர்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் படத்தின் பிரஸ்மீட்டில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது, நடிகர் அரசியல் வாரிசாக வந்துட்டு இருக்கீங்க என்று கேள்வி கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியான சிபி, என்னது நான் அரசியல் வாரிசா? என்று ஷாக்காக, வாட் ப்ரோ, இட்ஸ் வெரி ராங் ப்ரோ. நான் தளபதி விஜய் சாரோட ரசிகன். அதை வைத்து கட்சியில் இருக்கிறேன் என்று சொல்வது எப்படி என்று விஜய் ஸ்டைலில் பதிலளித்திருக்கிறார்.