பெண்ணிடம் கன்னித்தன்மை இருக்கான்னு பாக்காதீங்க..அத பாருங்க!! ஓப்பனாக பேசிய நடிகை பிரியங்கா..
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகியாகவும் திகழ்ந்து ஹாலிவுட் வரை பிரபலமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா.
நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து பெண் குழந்தையை பெற்ற பிரியங்கா, பிஸியாக படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அவரது தம்பி திருமணத்தின் போது அவர் அணிந்த 70 கோடி மதிப்புள்ள நெக்லஸ் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
பிரியங்கா சோப்ரா டேட்டிங்
ரிலேஷன்ஷிப் பற்றி பேசிய பிரியங்கா, எனக்கு முன்பு நடந்த காதல் தோல்விகளால் டேட்டிங் பண்ணுவதற்கு பயமாக இருந்தது. எனக்கு குடும்பம்னு நினைக்கிற ஒருத்தரோட வாழ்க்கையை தொடங்கணும்னு ஆசைப்பட்டேன்.
முன்பு இருந்த ரிலேஷன்ஷிப் என்கூட இருந்தவங்க எனக்கு நிறைய கஷ்டத்தை கொடுத்தார்கள். அதனால் தான் நிக் கூட டேட் பண்ணுவதற்கு பயமா இருந்தது என்று கூறியிருந்தார்.
கன்னித்தன்மை
தற்போது அளித்த பேட்டியில், கணவன்மார்கள் எல்லோரும் மனைவி கன்னித்தன்மையோடு இருக்கணும்னு எதிர்ப்பார்க்கூடாது. அதை பார்ப்பதற்கு பதில் நல்ல குணம், நல்ல நடத்தை உள்ள பெண்ணான்னு மட்டும் பாருங்கள் என்றும் ஏனென்றால் கன்னித்தன்மை ஒரு இரவில் முடிந்துவிடும்.
ஆனால் நல்ல குணம், நடத்தை, வாழ்க்கை முழுக்க நீடிக்கும்னு என்றும் கூறியிருக்கிறார். இதற்கு பலரும், நல்ல குணம், நடத்தை உள்ள பொண்ணு எப்பவுமே கன்னித்தன்மையை இழக்க மாட்டாங்கன்னு சொல்லி கலாய்த்து வருகிறார்கள்.