வீங்கி உப்பிப்போன தளபதி விஜய்யின் முகம்!! உண்மையான காரணமே இதுதானாம்..
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் லியோ படத்திற்கு பின் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் 68வது படமான GOAT படத்தில் நடித்து வருகிறார். படத்தின் ஷூட்டிங் முடியப்போகும் நிலையில் விஜய் தன்னுடைய அரசியல் விசயங்களை இதற்கிடையில் செய்தும் வருகிறார். கடந்த மாதம் மறைந்த கேப்டன் விஜயகாந்த் இறுதி சடங்கிற்கு வருவாரா என்று பலரும் எதிர்ப்பார்த்து இருந்தனர்.
அதேபோல் தன்னை வளர்த்து வாய்ப்புக்கொடுத்து தூக்கிவிட்ட விஜயகாந்த் இறுதி சடங்கிற்கு அன்று இரவு சென்று அஞ்சலி செலுத்தினார். அந்நிகழ்வுக்கு வந்த விஜய் இதுவரை இல்லாத அளவிற்கு முகம் வீங்கி கண்ணீர் மல்க காணப்பட்டார். அடுத்த சில தினங்களுக்கு பின் நிவாரண உதவி கொடுக்கப்போகும் இடத்தில் கூட விஜய் வீங்கிய முகத்தோடு காணப்பட்டார். பலரும் இவர் தான் விஜய்யா என்று கேள்வியை எழுப்பினார்கள்.
இந்நிலையில் அதற்கான காரணம் என்ன என்று மருத்துவ நிபுணர் மனோ கூறியிருக்கிறார். விஜய்யின் தொண்டையின் இரு பகுதிகளிலும் இருக்கும் தொரொக்ஸின் சுரப்பியில் கோளாறு ஏற்பட்டு இருக்கலாம் என்றும் இந்த சுரப்பி அதிகமாக சுரந்தால் கண்ணங்கள் வீக்கம் அடைவது வழக்கமான நிகழ்வு என்றும் தெரிவித்திருக்கிறார்.
அது குறைவாக சுரந்தாலும் இப்படித்தான் கண்ணம் வீங்கும். அப்படி குறைவாக சுரக்கும் போது உடல் எடை அதிகரிக்கக்கூடும். விஜய் உயரமாக இருப்பதால் நமக்கு அவர் எடை தெரியவில்லை. சிக்கன் பிரியாணியை சாப்பிடும் விஜய் நேரா நேரத்திற்கு சாப்பிடக்கூடிய பழக்கம் உள்ளவர் என்பதால் உடல் எடை நமக்கு குறைவாக தோன்றுகிறது என்று கூறியிருக்கிறார். அது சீக்கிரம் சரியாகிவிடும் என்று ரசிகர்கள் உறுதியாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.