ஸ்டுடியோவில் வைரமுத்து இதை தான் செய்தார்.... என்ன நடந்தது என்றுபல ஆண்டு உண்மையை உடைத்த பிரபல பாடகி.

Vairamuthu Chinmayi
By Edward Aug 29, 2022 07:01 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக திகழ்ந்து வருபவர் கவிஞர் வைரமுத்து. சில ஆண்டுகளுக்கு முன் வைரமுத்து தனக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக கூறி பேட்டியளித்து புகாரளித்து வந்தார். அதன்பின் வைரமுத்துவின் சுயரூபம் இதுதான் என்று இணையத்தில் பல இடங்களில் வைரமுத்துவை அவமானப்படுத்தி வந்தார்.

இதற்காக மீ டூ என்ற அமைப்பு மூலம் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்த பாலியல் தொந்தரவு பற்றி வெளிச்சத்துக்கொண்டு வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சின்மயில் என்னை வைத்து மீ டூ பகடைக்காயாக பயன்படுத்தி வருவதாக கூறியுள்ளார்.

மேலும் ஸ்விட்சர்லாந்தில் ஒரு நிகழ்ச்சி முடிந்து எல்லோரும் கிளம்பும் போது கலைநிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர் என்னிடம் வந்து உங்களை வைரமுத்து நேரில் சந்திக்க கூறியிருக்கிறார். ஏன் என்று கேட்ட சின்மயிக்கு சரியான பதிலளிக்காமல் சென்று விட்டார். பின் அம்மாவுடன் சின்மயி வைரமுத்துவை சந்திக்க சென்றார்.

ஸ்டுடியோவில் வைரமுத்து இதை தான் செய்தார்.... என்ன நடந்தது என்றுபல ஆண்டு உண்மையை உடைத்த பிரபல பாடகி. | What Happened At Vairamuthu Studio Chinmayi Broke

அம்மாவை உட்காரவைத்து விட்டு வைரமுத்துவை மேலே சந்திக்க ஸ்டுடியோவுக்கு சென்றுள்ளாராம் சின்மயி. அப்போது வைரமுத்து சின்மயியை கட்டிப்பிடித்து தவறாக நடந்து கொண்டார் என்று குற்றம் சாட்டினார். சென்னை வந்து இதுபோல் வைரமுத்து சின்மயிடம் தவறாக நடந்து கொண்டார் என்று பல இடங்களில் வைரமுத்துவை பற்றி கூறி வந்தார்.

இப்படி சின்மயி நடந்து கொண்டதால் அரசியல் கட்சியை வைத்து மிரட்டியும் அடிபணியாமல் இருந்து வந்தார். இதற்கு பல இயக்குனர்கள் பிரபலங்கள் வைரமுத்துவுக்கு ஆதரவாக தான் பேசி வந்துள்ளார்கள் என்றும் வைரமுத்து தன்னிடம் நடந்து கொண்ட ஆதாரத்தை 4,5 பேரிடம் கொடுத்துள்ளேன்.

எனக்கு ஏதாவது ஆகிவிட்டால் அவர்கள் மூலம் எல்லாம் தெரியவரும் என்பதற்காக என்று பேட்டியில் கூறியுள்ளார்.