என்ன கானல் நீர்? சொப்பு சாமான் விளையாட்டாகி போன அ.தி.மு.க பொதுக்குழு!

O Paneer Selvam AIADMK Edappadi K. Palaniswami
1 வாரம் முன்
Edward

Edward

அதிமுக கட்சியில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைதலைவராக ஓ பன்னீர் செலவமும், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் பதிவி வகித்து வந்தனர். சமீபத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று பேட்டிகொடுத்து பேசியது அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை உச்சத்தை எட்டியது.

இதனால் ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டணிகளுக்கிடையே கடும் சண்டை பூண்டது. பொதுக்குழு வேண்டாம் என்று ஓபிஎஸ் சார்பில் வழக்கு போடப்பட்டு அதை நிராகரித்தது நீதிமன்றம். இதனை தொடர்ந்து ஒற்றை தீர்மானத்தை விவாதிக்கலாம் அது குறித்த திர்மானத்தை நிறைவேற்றக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்திரவிட்டது.

இன்று பொதுக்குழு கூட்டம் துவங்க எடப்படியும், பன்னீர் செல்வமும் அதிமுக அலுவலகத்திற்கு வரும் போதே சில சச்சரவுகள் ஏற்பட்டது. பொதுக்குழு ஆரம்பித்து நடைபெற்ற போதே ஒபிஎஸ்-ஐ எதிர்த்து கோஷம் போட்டும் எடப்பாடி அவர்களுக்கு ஆதரவாக வாழ்க என்று கோஷம் போட்டும் உறுப்பினர்கள் கத்தியுள்ளனர்.

இதனால் ஒபிஎஸ் மற்றும் ஜெசிபி பிரபாகரன் மேடையில் இருந்து கீழே இறங்கினார்கள். ஓபிஎஸ் வெளியில் சென்ற போது எடப்பாடி ஆதரவாளர்கள் அவரை முதுகில் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதை நெட்டிசன்கள் இணையத்தில் ஓபிஎஸ்-ஐ கேலி செய்து கருத்துக்களையும் மீம்ஸ் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

Gallery Gallery Gallery Gallery

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.