மாலை 6 மணிக்கு மேல் விஜய் அப்படிதான் இருப்பார்!! தாயார் ஷோபா சொன்ன விஷயம்..
TVK விஜய்
தமிழ்நாடு முதலமைச்சராக மாறுவதற்கு விஜய்க்கு இன்னும் ஒருசில இடங்களே தேவையுள்ள நிலையில் 116 எம் எல் ஏக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. இன்னும் ஓரிரு இடங்களே தேவையுள்ள நிலையில் விஜய்யின் தவெக ஆட்சி 99 சதவீதம் உறுதியாகியுள்ளது.

என்னதான் கூட்டணி கட்சிகளின் ஆதரவை விஜய் பெற்றாலும் அதை வைத்து பலரும் விஜய்யை விமர்சித்து வருகிறார்கள். இது ஒருபக்கம் இருக்கையில் விஜய் மீது வைக்கப்படும் முக்கிய விமர்சனங்களாக பார்க்கப்படும் ஒன்று தான் 6 மணிக்கு மேல் ஒருமாதிரி இருப்பார் என்பதுதான். அதனை தவெகவினர் நம்புவதில்லை.
தாயார் ஷோபா
இந்நிலையில், விஜய்யின் தாயார் ஷோபா, சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், விஜய் முதலில் இருந்தே அவர் அப்பாவுடைய டிரைனிங் தான்.

காலை 9 மணியில் இருந்து மாலை 6 மணி வரை அல்லது காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரைதான் ஷூட்டிங் செல்வார். ரொம்பவே அவசியம் என்றால்தான் நைட் ஷூட்டிங்கிற்கு செல்வார். நைட் ஷூட்டுக்கு சென்றால் பகலில் வீட்டில்தான் இருப்பார் என்று கூறியிருக்கிறார் ஷோபா.