அம்பானி மகன் அனந்த் அம்பானி கைக்கடிகாரம்!! இத்தனை கோடி மதிப்பா?..
உலக தொழிலதிபர்களில் முன்னணி இடத்தினை பிடித்து வரும் முகேஷ் அம்பானி தன்னுடைய மகன் அனந்த் அம்பானியின் திருமணத்தை கடந்த ஆண்டு பிரம்மாண்ட முறையில் நடத்தி முடித்தார். திருமணத்தை தாண்டி அவர்களின் குடும்பத்தினர் அணிந்த ஆடை அணிகலன்கள் அனைத்தும் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
அனந்த் அம்பானி கைக்கடிகாரம்
அந்தவகையில் அனந்த் அம்பானி எப்போதும் பல கோடி மதிப்பிலான கைக்கடிகாரத்தை அணிந்து வருவார். அந்த வகையில் சில நாட்களுக்கு முன் இவரது தலைமையில் இருக்கும், குஜராத் ஜாம் நகரில் வந்தாரா விலங்குகள் மீடு மற்றும் பராமரிப்பு மையத்தினை பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைத்தார். இந்நிலையில் அனந்த் அம்பானி ரிச்சர்ட் மில்லே RM 26-01 டூர்பில்லன் பாண்டா என்ற வாட்ச் அணிந்துள்ளது பற்றி தகவல் வெளியாகியுள்ளது.
கலைநயத்துடன் அமைந்த இந்த கைக்கடிகாரத்தின் விலை ரூ. 30 கோடியாம். சில்லறை விலையாக ரூ. 5.36 கோடியாக இருக்கும் நிலையில் சந்தை மதிப்பில் ரூ. 30 கோடி வரைக்கும் இருக்குமாம். இந்த வாட்ச் வெறும் 30 மட்டுமே தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளதாம்.
இந்த வாட்ச்சில், வைரங்களால் அலங்கரிப்பட்ட 18kt வெள்ளைத் தங்கம், நேர்த்தியான கருப்பு தோலால் ஆனன் Strap, வைர கற்களால் ஆன Bezel, வெள்ளி மற்றும் வரை மணிகளால் ஆன Dial மற்றும் நீல வண்ண Dial-ல் மூங்கில் தளிர்களால் சூழப்பட்ட பாண்டா வடிவமைப்பு இருக்கிறதாம்.