முகம் சுருங்கி அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை நயன்தாரா!! மொத்ததுக்கும் இதுதான் காரணமா?
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. ஐய்யா, சந்திரமுகி போன்ற படங்களில் மலையாள நடிகையாக நடிக்க ஆரம்பித்த நயன், இப்படங்களின் மிகப்பெரிய வெற்றியால் அடுத்தடுத்த படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்து வந்தார்.

லேடி சூப்பர் ஸ்டார்
இடையில் காதல் தோல்விகள் என்று பல பிரச்சனைகளை சந்தித்து அதிலிருந்து மீண்டு வந்தார். 7 வருடங்களாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நயன் ஜூன் 9 ஆம் தேதி பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி 4 மாதத்தில் இரட்டை குழந்தையை வாடகைத்தாய் மூலம் பெற்று முதல் தீபாவளியையும் அவர்களுடன் கொண்டாடினார். தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து நயன் தாரா 81 வது படம் வரை பிஸியாக நடித்தும் கமிட்டாகியும் இருக்கிறார்.
நயன் தாரா நடிப்பில் கனெக்ட் படம் வரும் டிசம்பர் 22 ஆம்தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஸ்டில்ஸ் இணையத்தில் வெளியாகியது. அதில் நயன் தாராவின் ஒரு புகைப்படம் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

வயதான தோற்றம்
முகம் சுருங்கிய நிலையில் வயதான தோற்றத்தில் அவரது முகத்தை பார்த்த நெட்டிசன்கள் என்ன தான் நயன் தாராவுக்கு ஆச்சு என்று ஷாக்காகி வருகிறார்கள். அப்படி அவர் முகம் இப்படியாக என்ன காரணம் என்று பலர் இணையத்தில் கூறி வருகிறார்கள்.
ஆரம்பத்தில் நயன் தாரா முகத்திற்கு செலுத்திக்கொண்ட சிகிச்சை முறை தான் நயன் தாராவின் முகம் மாறக்காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் அது அப்படத்தின் லுக்கிற்காக கொஞ்சம் அவரை மாற்றி இருக்கிறாரே தவிர அவரது அழகு இன்னும் குறையவில்லை என்று சமீபத்திய புகைப்படம் காண்பித்திருக்கிறது.


