காசுலாம் வந்த பின்தான் கல்யாணம்!! வெளிப்படையாக பேசிய பிக்பாஸ் பிரதீப் ஆண்டனி..

Bigg Boss Marriage Pradeep Anthony Kottukkaali
By Edward Aug 23, 2024 06:30 AM GMT
Report

பிக்பாஸ் பிரதீப் ஆண்டனி

தமிழில் 2021ல் வெளியான வாழ் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி பிரபலமான பிரதீப் ஆண்டனி, அருவி, டாடா போன்ற படங்களில் நடித்து வந்தார். நடிகர் கவினின் நெருங்கிய நண்பராக இருக்கும் பிரதீப், பிக்பாஸ் 7 போட்டியில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

காசுலாம் வந்த பின்தான் கல்யாணம்!! வெளிப்படையாக பேசிய பிக்பாஸ் பிரதீப் ஆண்டனி.. | When My Marriag Biggboss Pradeep Antony Open Talk

பாதியில் ரெட் கார்ட் போடப்பட்டு வெளியேற்றப்பட்டதால் அவருக்கு பிக்பாஸ் ரசிகர்கள் கொந்தளித்து ஆதரவு அளித்தனர். இதனைதொடர்ந்து ஒருசில படங்களிலும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வரும் பிரதீப் ஆண்டனி, சமீபத்தில் தன் காதலியுடன் நிச்சயதார்த்தத்தை முடிந்திருந்தார்.

எப்போ கல்யாணம்

இன்று ஆகஸ்ட் 23ல் வெளியாகியுள்ள கொட்டுக்காளி படத்தின் ப்ரீ ரிலீஸ் பார்த்து பேட்டியளித்துள்ளார். அதில் எப்போது உங்களுக்கு கல்யாணம் என்று கேள்வி எழுப்பட்டது. அதற்கு பிரதீப், ஐய்யோ தெரியல, காசு வந்த பிறகுதான். கொஞ்சம் கொஞ்சமாக Events-லாம் செய்து வருகிறேன்.

காசுலாம் வந்த பின்தான் கல்யாணம்!! வெளிப்படையாக பேசிய பிக்பாஸ் பிரதீப் ஆண்டனி.. | When My Marriag Biggboss Pradeep Antony Open Talk

இன்னும் கொஞ்சம் காசு வந்தால் கல்யாணத்தை முடித்துவிடலாம் பார்ப்போம். ஏற்கனவே முதலில் இருந்து வீட்டில்தான் இருக்கிறார், கல்யாணம் பண்ணி முறைப்படி வரப்போகிறார்கள் அவ்வளவுதான் என்று பிரதீ ஆண்டனி பேசியிருக்கிறார்.