16 வருட இசை வாழ்க்கை!! கமல் ஹாசனை பிரபல இசையமைப்பாளர் ஒதுக்க காரணமே இதுதான்!!
தமிழ் சினிமாவில் சிறுவயது இருக்கும் போதே ஏ ஆர் ரகுமானால் குட்டி பாடகராக அறிமுகமாகியவர் ஜி வி பிரகாஷ்குமார். சிக்குப்புக்கு ரயிலே, குலுவாளிலே உள்ளிட்ட பாடல்களில் ஆரம்பித்து தற்போது தேசிய விருது இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார்.
முன்னணி நடிகர்கள் அஜித், ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம் உள்ளிட்ட பலர்களிடன் படங்களில் வேலை செய்தும் பாடல்கள் பாடியும் வருகிறார். மேலும் 20க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாகவும் நடித்தும் வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் 16 வருட இசை வாழ்க்கையில் இதுவரை கமல் ஹாசனுடன் பணியாற்றாமல் இருப்பது குறித்து மனம் திறந்துள்ளார். அந்த கேள்விக்கு பதிலளித்த ஜி வி பிரகாஷ், நான் சமுக கருத்துக்களோ அரசியல் குறித்த கருத்தை இணையத்தில் பகிர்ந்தால், அதற்கு கால் செய்து பாராட்டுவார்.
ஆனால், தனிப்பட்ட விசயம் அப்படியிருக்கும் போது எனக்கென்று ஒரு காமினேஷன் இயக்குனர்கள் தரப்பினர் இருக்கிறார்கள். என்னுடைய இயக்குனர்கள் அவரை தேர்வு செய்கிறது தான் முக்கியம். அவர்கள் கமல் ஹாசனுடன் வேலை செய்தால் நானும் பணியாற்றுவேன் என்று கூறியுள்ளார்.