இந்தியாவில் இல்லாதது உக்ரைனில் என்னப்பா இருக்கு? டாக்டருக்காக எதுக்கு அங்க போராங்க..

ukraine doctorate IndianEmbassy
By Edward Feb 26, 2022 10:52 AM GMT
Report

பெரும்பாலும் இந்திய மாணவர்கள் படிப்பிற்காக வெளிநாட்டுக்கு சென்று படிப்பதை விருப்பமாக கொள்வார்கள். அப்படி ஒருசில மருத்துவ படிப்பிறகாக உக்ரைன் நாட்டிற்கு படையெடுத்து செல்வதுண்டு. அப்படி இங்கு இல்லாத ஒன்று அங்கு என்ன இருக்கிறது என்பதை பார்ப்போம்.

இந்தியாவில் மருத்துவ படிப்பிற்காக தனியார் கல்லூரியில் சுமார் 60 லட்சம் முதல் 1.1 கோடி ரூபாய் அளவில் செலவாகிறது. ஆனால் நீட் இல்லாமல் உக்ரைனில் மருத்துவ படிப்பிற்கு வெறும் 15 லட்சம் முதல் 16 லட்சம் வரை தான் செலவாகிறதாம்.

அதிலும் உக்ரைனில் மருத்துவ படிப்பு உலகளாவிய அங்கீகாரம் பெற்றதால் உலகில் எங்கு வேண்டுமானாலும் டாக்டராக பணியாற்ற முடியும். இந்தியாவில் 84 ஆயிரம் மருத்துவ சீட்டிற்கு 10 லட்சம் விண்ணப்பங்கள் 2021ல் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

ஆனால் உக்ரைனில் 33 கல்லூரிகளுக்கு டிமாண்ட் குறைவு தான். இதனால் தான் இந்திய மாணவர்கள் உக்ரைனில் படையெடுத்து பக்க ஆசைப்படுகிறார்கள். தற்போது அங்கு போர் சூழல் காணப்படுவதால் இந்திய மாணவர்கள் தனி விமானங்கள் மூலம் வழவழைக்கப்பட்டு வருகிறார்கள்.

உக்ரைன் நாடு உட்பட மற்ற நாடுகளில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்து படிப்பினை மேற்கொள்கின்றார்களாம்.