விவாகரத்துலாம் வேண்டாம்? சேர்ந்து வாழ தூதுவிட்ட ஒல்லி நடிகருக்கு கெடு விதித்த மனைவி
தமிழில் இவரெல்லாம் ஒரு நடிகரா என்று கூறும் அளவிற்கு நடிகரின் ஆரம்பகால சினிமாகாலகட்டத்தில் அவரின் உடலை பார்த்து விமர்சனம் செய்து வந்தவர்கள் பலர். அப்படியொரு நடிகருக்கு தன் மூத்த மகளுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார் டாப் ஸ்டார் ஆக்டர்.
திருமணமாகி பல வருடங்களாகி மகன்கள் இருக்கும் நிலையில் சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்ட, ஒல்லி நடிகரை விட்டு பிரிந்துள்ளார் டாப் ஸ்டார் நடிகரின் மகள். இதையடுத்து எங்கு போனாலும் விவாகரத்து செய்தி தான் அந்த ஒல்லி நடிகரை பாடாய்படுத்திருக்கிறதாம். இதனால் நடிகர் மனைவிக்கு மீண்டும் வாழமுடிவெடுத்து தூதுவிட்டுள்ளார்.
அதேபோல் ரகசியமாக இருவரும் சந்தித்தும் வருகிறார்கள் என்ற செய்தியும் சமீபத்தில் பேசப்பட்டது. அந்த ஒரு தருணத்தில் சேர்ந்துவிட்டோம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிச்சிடலாம் என்று கேட்டிக்கொண்டுள்ளார். ஆனால் மனைவியோ உங்களை இப்போதைக்கு நம்பமுடியாது.
சில மாதங்கள் உங்களை கண்காணிக்க வேண்டும். அதற்காக கண்டீசன் எல்லாம் போட்டுள்ளார் அம்மணி. இதற்கு ஒப்புக்கொண்ட நடிகர் என்ன வேண்டுமானாலும் சரி என்று தன் பிள்ளைகளுக்காக ஒரு வழிக்கு வந்துவிட்டாராம்.
இந்த ஆண்டு இறுதியில் அவர்களது திருமண நாள் வரும் என்பதால் அப்போது அறிவிக்கலாம் என்று முடிவெடுத்ததாகவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.