கொஞ்சம் வில் ஸ்மித்தை இந்த பக்கம் அனுப்புங்க! இங்கயும் அதுபோல இருக்காங்க சிலர்!

trollmeme willsmith crisrock
By Edward Mar 29, 2022 03:50 PM GMT
Report

உலகம் முழுவதும் தற்போது டிரெண்டிங் டாப்பிக்காக இருப்பது ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் பற்றி தான். 94 வது ஆஸ்கர் விருதின் போது மனைவியை கிண்டல் செய்த தொகுப்பாளரை மேடையில் ஏறி பளார் விட்டுட்டது தான்.

பளார் விட்ட காரணம்:-

நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் சில தொகுப்பாளர்கள் காமெடியாக சொல்லும் விஷயம் கூட சீரியஷாக முடியும் நிலையை உருவாக்கும். அப்படி நடந்தது தான் ஆஸ்கர் நிகழ்ச்சியில்.

தொகுப்பாலர் கிறிஸ் ராக் தன் பாணியில் காமெடி செய்கிறேன் என்ற பெயரில் நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி ஜடாவின் தலை முடியை பற்றி கிண்டல் செய்து பேசினார். காமெடியாக சென்று கொண்டிருக்கும் போது சிரித்து கொண்டிருந்த வில் ஸ்மித் பொருமை இழந்து மேடையில் ஏறி கிறிஸ் ராக் கன்னத்தில் பளார் என்று அறைந்துள்ளார்.

சற்றும் எதிர்பாரத கிறிஸ் சிரித்துக்கொண்டே பேச மேடையில் இருந்து இறங்கிய வில் ஸ்மித் என் மனைவி பெயரை கூறாத வாயை மூடு என்று கோபத்தில் கத்தியுள்ளார். அரங்கமே ஆடிப்போன அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரியளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

அதன்பின் வில் ஸ்மித் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினை கிங் ரிச்சர்ட் படத்திற்காக பெற்றார். மேடையில் உருக்கமாகவும் பேசி கண்ணீர் விட்டார்.

இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்து ஒரு நாளாகிய நிலையில், வில் ஸ்மித் நிகழ்ச்சியில் அப்படி நடந்து கொண்டதற்காக கிறிஸ் ராக்கிடமும் நிகழ்ச்சி நடத்திய நிறுவனத்திடமும் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த சம்பவம் இணையத்தில் பகிரப்பட்டு வரும் நிலையில் வில் ஸ்மித்தை கொஞ்சம் தமிழ்நாடு பக்கம் அனுப்புங்க என்று கூறி மீம்ஸ் புகைப்படங்களை நெட்டிசன்கள் வெளியிட்டு வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGallery