பிரபல தொலைக்காட்சி சீரியல் யாரடி நீ மோகினி நிறுத்தப்படுகிறதா? இதுதான் காரணமா!
பல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே இருக்கும். அந்தவகையில் டிஆர்பியை தன் கைக்குள் அடக்கி வைத்திருந்த பிரபல தொலைக்காட்சியான சன் டிவி தற்போது சொதப்பி வருவதாக தெரிகிறது. அதற்கு காரணம் சீரியல் தயாரிக்கும் நிறுவனங்கள் போடும் கண்டிஷன் தானாம்.
தற்போது அந்த தொலைக்காட்சியை பின்னுக்கு தள்ளி விஜய் மற்றும் ஜீ தொலைக்காட்சி சீரியல்களில் பெரியளவில் கவனம் செலுத்தி வருகிறது. அந்தவகையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் சன் டிவிக்கே டஃப் கொடுக்கு அளவிற்கு ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் யாரடி நீ மோகினி. அதிக பட்ஜெட்டோடு ஆரம்பித்து ஒளிப்பாரப்பாகும் இந்த சீரியலில் நடிகர் விஜய்யின் நண்பர் நடிகர் சஞ்சீவ் நடித்திருந்தார். அ
வரை சன் நிறுவனம் கண்மனி சீரியலுக்கு சம்பளம் அதிகம் கொடுத்து எடுத்துள்ளது. அவருக்கு அடுத்ததாக ஸ்ரீ கணேசன் நடித்து வருகிறார். பல எபிசோட்களை தாண்டியுள்ள இந்த சீரியல் தற்போது நிறைவரைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம் சீரியலில் வில்லி ஸ்வேதா தான் முக்கிய கதாபாத்திரமாக அமைந்து வருகிறார்.
தற்போது அந்த கதாபாத்திரம் இறந்துள்ளதால் கூடிய சீக்கிரமே இந்த சீரியல் நிறைவடையப்போவதாக கூறப்படுகிறது.
கதையில் ஸ்வாரஷ்யம் அந்த கதாபாத்திரத்தை நோக்கித்தான் செல்லும் என்பதற்காக இனிமேல் எதிர்ப்பார்ப்புகள் குறைய வாய்ப்பு இருப்பதால் இந்த முடிவை எடுத்திருக்கலாம என்றும் கூறப்படுகிறது.